ஸ்டேரிங் ராடு கட் ஆனதால் பாலத்தில் நின்ற அரசு பஸ் பெரும் விபத்து தவிர்ப்பு

வேடசந்துார்: வேடசந்துார் அருகே ஸ்டேரிங் ராடு கட் ஆனதால் அரசு பஸ்சானது பாலத்தில் நின்றது.

வேடசந்துாரிலிருந்து வடமதுரை செல்லும் அரசு டவுன் பஸ் நேற்று முன்தினம் இரவு ஆத்து மேடு தற்காலிக பஸ் ஸ்டாண்டிலிருந்து புறப்பட்டது. இதை பஸ் டிரைவர் செல்வகுமார் ஒட்டி சென்றார். வேடசந்துார் குடகனாற்று பாலத்தின் மீது பஸ் சென்றபோது திடீரென ஸ்டேரிங் ராடு கட் ஆகி விழுந்தது. இதனால் பஸ் டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார். பஸ் பாலத்தின் மீது மெதுவாக சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Advertisement