இதே நாளில் அன்று
ஜனவரி 31:
தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலையில், அஞ்சல் துறை அதிகாரியான கந்தாடை நாராயணசாமி அய்யர் - விசாலாட்சி தம்பதிக்கு மகனாக, 1912ல் இதே நாளில் பிறந்தவர் க.நா.சுப்பிரமணியம்.
சிறு வயதிலேயே தாயை இழந்து, தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தார். பின், சென்னை சென்று, ஆங்கில பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதினார். தொடர்ந்து, 'சூறாவளி, சந்திரோதயம், எழுத்து, இலக்கிய வட்டம், முன்றில்' உள்ளிட்ட இதழ்களில் புதுக்கவிதை, நாவல், சிறுகதை, இலக்கிய விமர்சனம் உள்ளிட்டவற்றை எழுதி முழுநேர எழுத்தாளரானார்.
தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், ஹிந்தி மொழிகளை அறிந்த இவர், புதிய எழுத்தாளர்களை தொடர்ந்து ஊக்குவித்தார். இவரின், 'பொய்த்தேவு' எனும் நாவல் மிகவும் புகழ் பெற்றது.
இவரது, 'இலக்கியத்துக்கு ஒரு இயக்கம்' என்ற திறனாய்வு நுால், சாகித்ய அகாடமி விருதை பெற்றது. இவருடைய நுால்கள், 2006ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. தமிழ் - ஆங்கிலத்தில் பரஸ்பரம் மொழிபெயர்ப்பு நுால்களை தந்த இவர், தன் 76வது வயதில், 1988 டிசம்பர் 18ல் மறைந்தார்.
க.நா.சு., பிறந்த தினம் இன்று!
மேலும்
-
பசுமை மின் வழித்தட திட்டம் - 3: மத்திய அரசு நிதி பெறுவதில் தமிழக மின் வாரியம் சுணக்கம்
-
பாதுகாப்பு துறை பங்குகள் ஒரு மாதத்தில் 23% உயர்வு
-
விலை நிலவரம் : தங்கம் வெள்ளி
-
அலங்கார ஊர்திகள் அணிவகுப்புக்கு பரிசுகள் அறிவிக்காததால் ஏமாற்றம்
-
ஃபண்டு பயோடேட்டா:ஃபண்டு பயோடேட்டா
-
ஏறுமுகத்தில் குண்டு மிளகாய் குவின்டால் ரூ.33,000