அலங்கார ஊர்திகள் அணிவகுப்புக்கு பரிசுகள் அறிவிக்காததால் ஏமாற்றம்
சென்னை: தமிழக அரசு சார்பில் நடந்த, குடியரசு தின விழாவில், அரசு துறைகளின் அலங்கார ஊர்திகளில், சிறந்த ஊர்திகளுக்கும், கலை நிகழ்ச்சிகள் நடத்திய மாணவியருக்கும், பரிசுகள் அறிவிக்கப்படாதது, அலுவலர்கள் மற்றும் மாணவியரிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசு சார்பில், ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா, மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் கொண்டாடப்படுகிறது.
கலைநிகழ்ச்சி விழாவில், பள்ளி, கல்லுாரி மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், அரசு துறைகளின் சாதனைகளை விவரிக்கும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடக்கும். சிறப்பாக கலை நிகழ்ச்சி நடத்திய மாணவியருக்கும், சிறந்த அலங்கார ஊர்திகளுக்கும் முதல் மூன்று பரிசுகள் வழங்கப்படும்.
விழா முடிந்து, மாலை கவர்னர் மாளிகையில் நடக்கும் தேநீர் விருந்தில், கவர்னர் பரிசுகளை வழங்கி கவுரவிப்பார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, கவர்னர் ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இதனால், தேநீர் விருந்தில் பங்கேற்பதை, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தவிர்த்து வருகின்றனர்.
இது, குடியரசு தின விழாவிலும் எதிரொலித்தது. விழாவில் இருவரும் பங்கேற்றாலும், முகம் கொடுத்து பேசிக் கொள்ளவில்லை.
இந்நிலையில், கலை நிகழ்ச்சி நடத்திய மாணவியரில், முதல் மூன்று இடங்களை பிடித்தோர், அலங்கார ஊர்திகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த துறைகள் விபரம் அறிவிக்கப்படவில்லை.
இது, அலங்கார ஊர்தி தயார் செய்ய, பல நாட்கள் உழைத்த துறைகளின் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களும், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளி, கல்லுாரி மாணவியரும், ஏமாற்றம் அடைந்துஉள்ளனர்.
இடம்பெறவில்லை இது குறித்து, பொதுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அலங்கார ஊர்திகளுக்கும், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கும், கவர்னர் பரிசு வழங்குவது வழக்கம். கடந்த ஆண்டு கவர்னரின் நிகழ்ச்சி நிரலில், பரிசு வழங்கும் நிகழ்ச்சி இடம்பெறவில்லை.
எனவே, முதல்வர் ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார். அதேபோல, இந்த ஆண்டுக்கான பரிசும் முதல்வரால், விரைவில் வழங்கப்படும். அப் போது, போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விபரம் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
ஈஷாவிற்கு வருகை தரும் மக்களுக்கு இலவச யோக வகுப்புகள்
-
தமிழகத்திற்கான அறிவிப்புகளை பட்ஜெட்டில் வெளியிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
-
ஜனவரி மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.93 லட்சம் கோடி
-
வெனிசுலாவின் கச்சா எண்ணெயை இந்தியா வாங்கும்; அதிபர் டிரம்ப் நம்பிக்கை
-
தைப்பூச நாளில் முருகன் கோவில்களில் திரண்ட பக்தர்கள்; காவடி எடுத்தும், வேல் குத்தியும் நேர்த்திக்கடன்
-
'உயர்ந்த எண்ணங்கள் இருந்தால் வெற்றியின் உச்சத்தை தொடலாம்'