பாதுகாப்பு துறை பங்குகள் ஒரு மாதத்தில் 23% உயர்வு
புதுடில்லி: இன்று, அடுத்த நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பாதுகாப்பு துறை சார்ந்த நிறுவனங்களின் பங்கு விலை, கடந்த ஒரு மாதத்தில் 23 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
கடந்த 2015 - 16ம் நிதியாண்டில், 2.47 லட்சம் கோடி ரூபாயாக இருந்த ராணுவ பட்ஜெட், நடப்பு நிதியாண்டில் இரு மடங்கு உயர்ந்து, 6.81 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.
ராணுவத்தை நவீனப்படுத்தும் மூலதன செலவு, இரு மடங்குக்கு மேல் உயர்ந்து, 1.93 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது.
அடுத்த நிதியாண்டுக்கான ராணுவ பட்ஜெட் கடந்த நிதியாண்டை விட, 20 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஓர்
ஆண்டில், ராணுவ தளவாட உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், முதலீட்டாளர்களுக்கு 68 சதவீதம் லாபம் ஈட்டி தந்துள்ளன.
பட்ஜெட் எதிர்பார்ப்பு காரணமாக, கடந்த ஒரு மாதத்தில், நிப்டி பாதுகாப்பு குறியீடு ஏழு சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
ராணுவ உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் எம்.டி.ஏ.ஆர்., டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பங்கு விலை அதிகபட்சமாக 23 சதவீதமும், பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை 12 சதவீதமும் உயர்ந்துள்ளன.
இதற்கு அடுத்தபடியாக, 'கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ், ஹெச்.ஏ.எல்., ஜென் டெக்னாலஜிஸ்' உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு விலை ஒற்றை இலக்கத்தில் உயர்ந்துள்ளன.
@block_B@ பாதுகாப்பு துறை பட்ஜெட் 2015 - 16 ரூ. 2.47 லட்சம் கோடி 2025 - 26 ரூ. 6.81 லட்சம் கோடிblock_B
மேலும்
-
இந்த முறை பிராந்திய போராக இருக்கும்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை
-
சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத 68,000 அரசு ஊழியர்களின் சம்பளம் நிறுத்தம்; உ.பி. அரசு அதிரடி
-
தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவுக்காக காங்., காத்திருப்பு; முதலில் பேச அழைக்கும் என எதிர்பார்ப்பு
-
மத்திய பட்ஜெட்டில் கேரளா மிஸ்ஸிங்; சசிதரூர் விமர்சனம்
-
நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏமாற்றமில்லை; அமைச்சர் பியுஷ் கோயல்
-
கம்போடியா... காரைக்கால் அம்மையார்... கமல்... நான்!