தொழுநோய் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், உலக தொழுநோய் எதிர்ப்பு தினத்தையொட்டி, தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் சார்பில், தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் பேரணியை துவக்கி வைத்தார்.


தொடர்ந்து கலெக்டர் தலைமையில் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். கிருஷ்ணகிரி, பழையபேட்டை காந்தி சிலை அருகில் துவங்கிய பேரணி, தர்மராஜா கோவில் தெரு வழியாக கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில், தொழுநோய் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி, 100க்கும் மேற்பட்ட நர்சிங் கல்லுாரி மாணவியர் கலந்து கொண்டனர்.


சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் மோகனபானு, நகராட்சி கமிஷனர் சதீஷ்குமார், தொழுநோய் துறை துணை இயக்குனர் அன்பரசு, வட்டார மருத்துவ அலுவலர் இனியாள் மண்டோதரி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement