விபத்தில்லாமல் வாகனங்களை இயக்கிய 36 டிரைவர்கள் கவுரவிப்பு

ஓசூர்: கிருஷ்ணகிரி, ஓசூர் வட்டார போக்குவரத்துத்துறை சார்பில், 37 வது சாலை பாதுகாப்பு மாத விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஓசூர் பஸ் டிப்போவில், தர்மபுரி மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்துடன் இணைந்து, விபத்தில்லாமல் வாகனங்களை இயக்குவது குறித்து, அரசு பஸ் டிரைவர்கள், 108 அவசரகால ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கான கருத்தரங்கம் நேற்று நடந்தது.


கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, ஊத்தங்கரை பஸ் டிப்போக்களில் கடந்த, 25 ஆண்டுகளாக, எந்த விபத்தும் ஏற்படுத்தாமல், அரசு பஸ்களை இயக்கி சேவையாற்றிய, 24 டிரைவர்கள், 108 அவசரகால ஆம்புலன்ஸ் டிரைவர்கள், 12 பேருக்கு, ஓசூர் சப்-கலெக்டர் ஆக்ரிதி சேத்தி, தர்மபுரி மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் செல்வம், ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் பாராட்டி பரிசு மற்றும் விருது வழங்கி கவுரவித்தனர்.

Advertisement