வெனிசுலாவின் கச்சா எண்ணெயை இந்தியா வாங்கும்; அதிபர் டிரம்ப் நம்பிக்கை

6


வாஷிங்டன்: ''ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு பதிலாக வெனிசுலாவிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும்'' என அமரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.


தென் அமெரிக்க நாடான வெனிசுலா, உலகிலேயே மிகப்பெரிய கச்சா எண்ணெய் வளம் கொண்ட நாடு. அந்நாட்டின் அதிபராக இருந்த நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில், அமெரிக்க ராணுவம் கடந்த 3ல் கைது செய்து நாடு கடத்தியது.

இதையடுத்து, டெல்சி ரோட்ரிகஸ் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றார். அதன்பின் அங்கு பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அந்த வகையில், வெனிசுலாவின் எண்ணெய் துறையை தனியார் மயமாக்கும் சட்டத்தில் அந்நாட்டு அதிபர் டெல்சி ரோட்ரிகஸ் கையெழுத்திட்டுள்ளார்.



இது குறித்து நிருபர்களிடம் அதிபர் டிரம்ப் கூறியதாவது: சீனா எண்ணெய் விஷயத்தில் ஒரு சிறந்த ஒப்பந்தம் செய்ய முன்வந்தால் அதை வரவேற்கிறோம். இந்தியாவும் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு பதிலாக வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் வாங்கப் போகிறார்கள். இது தொடர்பாக ஏற்கனவே ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

உக்ரைனில் நடந்து வரும் போருக்கு மத்தியில், ரஷ்யாவின் வருவாயை கட்டுப்படுத்த அமெரிக்கா பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. ரஷ்ய எண்ணெயை வாங்கிய காரணத்தினால், இந்தியா மீது அதிக வரிகளை விதித்து டிரம்ப் அறிவித்தார். ரஷ்ய எண்ணெய் இறக்குமதிகளுக்கு மாற்றாக, வெனிசுலா எண்ணெயை வாங்குமாறு அமெரிக்க தலைவர்கள் இந்தியாவை வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement