தைப்பூச நாளில் முருகன் கோவில்களில் திரண்ட பக்தர்கள்; காவடி எடுத்தும், வேல் குத்தியும் நேர்த்திக்கடன்
சென்னை: தைப்பூச விழாவையொட்டி இன்று (பிப்ரவரி 01) திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் திரண்டுள்ளனர். காவடி எடுத்தும், வேல் குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, திருச்செந்தூர், பழநி, மருதமலை, வடபழனி உள்ளிட்ட முருகன் கோவிலுக்கு பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தி பாத யாத்திரையாக சென்று தரிசனம் செய்தனர். திரளாக கலந்து கொண்ட பக்தர்களின் 'அரோகரா' கோஷங்கள் விண் அதிர எழுந்தன. திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.









@block_B@
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்; இந்த புனிதமான தைப்பூச நன்னாளில், அனைவருக்கும் எனது வாழ்த்துகள். முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்கு கிடைக்கட்டும். அனைவரும் நல்ல ஆரோக்கியம், வெற்றி மற்றும் வளம் பெற்று வாழ வேண்டுகிறேன், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.block_B
தர்மத்தை நிலைநாட்டியவர்
தைப்பூச விழாவையொட்டி துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "அணி முகங்கள் ஓர் ஆறும், ஈர்-ஆறு கையும், இணை இன்றித் தான்உடையான் ஏந்திய வேல் அன்றே, பிணிமுகம் மேற்கொண்டு, அவுணர் பீடு அழியும்வண்ணம் மணி விசும்பின் கோன் ஏத்த, மாறு அட்ட வெள்வேலே" என வேல் ஏந்தி அதர்மத்தை அழித்துத் தர்மத்தை நிலைநாட்டி எந்நாளும் நம்மை காத்தருளும் முருகப் பெருமானின் தைப்பூச நன்னாளில் அனைவருக்கும் எனது இனிய தைப்பூச திருநாள் நல்வாழ்த்துகள்.
தைப்பூச நன்னாளில் முருகன் அருளால் நாட்டில் அறியாமை என்னும் இருள் நீங்கி ஞான ஒளி பரவட்டும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகட்டும், வறுமை நீங்கி வளம் பெருகட்டும், கவலைகள் தீர்ந்து மக்கள் வாழ்வெல்லாம் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகி, தொட்டது யாவும் துலங்க, வெற்றி மேல் வெற்றி சேர முருகப் பெருமானின் பூரண அருள் என்றும் துணை நிற்க்கட்டும் . இவ்வாறு சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
முருகப் பெருமானின் அருட் கருணையால் விடியாத திராவிஷ ரவுடிக் கும்பல் இந்த தேர்தலோடு அடியோடு காணாமற் போகக் கடவதாகட்டும்.
கூட்டம் கூட்டமாக கோவில்களில் குவிந்த பக்தர்களை டிவியில் பார்க்க பிரமிப்பாக இருந்தது. இவ்வளவு கூட்டமும் இந்து என்ற உணர்வோடு ஓட்டு சாவடிக்கு போனால் திமுக கூட்டணி கட்சிகள் என்னாகும்?
திராவிட மாடலுக்கும் , அதன் அடிமைகளுக்கும் எரிச்சலூட்டும் செய்தி ....
திருச்செந்தூர் பக்த கோடிகளே, இம்முறை எனது கோவிலுக்கு வருவதை விட, விடியலை வீட்டுக்கு அனுப்ப உதவுங்கள்...அது என்னை நேரில் தரிசிப்பதற்கு சமம்...வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...!!!மேலும்
-
இந்த முறை பிராந்திய போராக இருக்கும்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை
-
சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத 68,000 அரசு ஊழியர்களின் சம்பளம் நிறுத்தம்; உ.பி. அரசு அதிரடி
-
தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவுக்காக காங்., காத்திருப்பு; முதலில் பேச அழைக்கும் என எதிர்பார்ப்பு
-
மத்திய பட்ஜெட்டில் கேரளா மிஸ்ஸிங்; சசிதரூர் விமர்சனம்
-
நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏமாற்றமில்லை; அமைச்சர் பியுஷ் கோயல்
-
கம்போடியா... காரைக்கால் அம்மையார்... கமல்... நான்!