பொதுக்கூட்ட வழிகாட்டு விதிமுறைகள்; எதிர்த்து தவெக வழக்கு

4


சென்னை: அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்கள் நடத்துவது தொடர்பாக, தமிழக அரசால் வெளியிடப்பட்ட, வழிகாட்டு விதிமுறைகளை ரத்து செய்யக் கோரி, த.வெ.க., சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


கரூரில், கடந்த ஆண்டு செப். 27ம் தேதி, த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரத்தில் ஏற்பட் ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் இறந்தனர். அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்களின் ரோடு ஷோ நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்களுக்கு, வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கக்கோரி, த.வெ.க., அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், சென்னை உயர் நீதிமன்றத்தில், பொது நல வழக்குகளை தாக்கல் செய்தன.

அவற்றை விசாரித்த, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், ஜன.,5ல் வழிகாட்டு விதிமுறைகளை உருவாக்கி, அது தொடர்பான அரசாணையை, தமிழக அரசு வெளியிட்டது. அந்த வழிகாட்டு விதிமுறைகளை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், த.வெ.க., சார்பில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

Advertisement