வெயிலில் அதிகம் பணி செய்பவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு: உறுப்பு மாற்று சிகிச்சைக்காக 7,200 பேர் காத்திருப்பு
கோவை: வாழ்வியல் நோய்களுக்கு இணையாக, அதீத வெயிலில் பணிபுரிபவர்கள் சிறுநீரக பாதிப்புக்கு ஆளாவதாக, தமிழ்நாடு உடல் உறுப்பு தான ஆணையம் சார்பில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளன.
தமிழகத்தில் சிறுநீரகம் செயல் இழந்து, 7,200 பேர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக பெயர் பதிவு செய்து, காத்திருப்பு பட்டியலில் உள்ளனர். சமீப காலங்களில், 35-40 வயதினருக்கு கூட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் சூழல் உள்ளன.ஆண்டுதோறும், காத்திருப்பு பட்டியலில் உள்ள எண்ணிக்கையை ஒப்பிட்டால், 6-7 சதவீதம் பேருக்கு மட்டுமே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
ஆண்டுதோறும், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. கடந்த, 2024 புள்ளிவிபரங்களின் படி, 449 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தமிழக மருத்துவமனைகளில் செய்யப்பட்டுள்ளன. வரும் முன் பாதுகாப்பு என்பதே இதற்கு தீர்வு என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
தமிழ்நாடு உடல் உறுப்பு தான ஆணையத்தின் உறுப்பினர் செயலர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:தமிழகத்தில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக பதிவு செய்து, 7,200 பேர் காத்திருக்கின்றனர். தற்போது, 35-40 வயதினர் கூட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு காத்திருப்பதை காண்கிறோம். சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், வலி நிவாரணி மருந்துகளை அதிகம் எடுத்தல், சிறுநீரக பாதையில் பாதிப்பு, உடல் பருமன் என்பது அனைவரும் அறிந்த பொதுவான முக்கிய காரணங்கள்.
தற்போது இதற்கு இணையாக, அதீத வெப்பத்திற்கு உள்ளாகுதல், காற்று மாசு, ரசாயனங்கள் சேர்க்கை ஆகிய மூன்று முக்கிய காரணங்கள் ஆராய்ச்சிகளின் வாயிலாக கண்டறிந்துள்ளோம். கட்டுமானம், விவசாய தொழில் உள்ளவர்கள், துறை சாரா பிரிவுகளில் மணிக் கணக்கில் தொடர்ந்து வெயிலில் பணிபுரிபவர்களே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர் என்பதை ஆராய்ச்சிகள் வாயிலாக உறுதி செய்துள்ளோம். சாலை அமைக்கும் பணியாக இருந்தாலும் சரி, வயல், கட்டுமானம், செங்கல்சூளை, உப்பளம் எங்கு பணி செய்தாலும் குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் அருந்தவும், நிழலில் அமரவும் ஏற்பாடு செய்யவேண்டும்.
பணி செய்யும் இடத்தில் பாதுகாப்பான தண்ணீர் வசதி இருக்கவேண்டும் என்ற பரிந்துரைகளை முன் வைக்கின்றோம். அரசு அறிவுறுத்தலின்படியே, இது சார்ந்த ஆராய்ச்சிகள் மேற்கொண்டோம்; ஆராய்ச்சி முடிவுகள் அடுத்த கட்ட பரிசீலனைக்கு எடுத்து செல்லப்படும். தவிர, வாழ்வியல் மாற்றங்களை ஏற்படுத்துவதுடன், பருவநிலை பாதுகாப்பு செயல்பாடுகளுக்கும் ஒவ்வொருவரும் பங்களிப்பு அளிக்க வேண்டியது கட்டாயம்.இவ்வாறு, அவர் கூறினார்.
வியர்வை வெளியேறும் அளவை கவனத்தில் கொண்டு அதற்கேற்ப தண்ணீர் அவ்வப்போது குடிக்கனும். உணவில் செய்யப்படும் நிறமிகள் மற்றும் ஏனைய ரசாயனங்கலும் சிறுநீரகத்தை பாதிக்கிறது.
தானம் செய்வதை என்றும் தலைத்து நிற்கும்மேலும்
-
பசுமை மின் வழித்தட திட்டம் - 3: மத்திய அரசு நிதி பெறுவதில் தமிழக மின் வாரியம் சுணக்கம்
-
பாதுகாப்பு துறை பங்குகள் ஒரு மாதத்தில் 23% உயர்வு
-
விலை நிலவரம் : தங்கம் வெள்ளி
-
அலங்கார ஊர்திகள் அணிவகுப்புக்கு பரிசுகள் அறிவிக்காததால் ஏமாற்றம்
-
ஃபண்டு பயோடேட்டா:ஃபண்டு பயோடேட்டா
-
ஏறுமுகத்தில் குண்டு மிளகாய் குவின்டால் ரூ.33,000