வாஷிங்டன் ஸ்குவாஷ்: அரையிறுதியில் அனாஹத்
வாஷிங்டன்: சர்வதேச ஸ்குவாஷ் தொடரின் அரையிறுதிக்கு இந்தியாவின் அனாஹத் சிங் முன்னேறினார்.
அமெரிக்காவின் வாஷிங்டனில், 'பயர் ஓபன்' சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. பெண்களுக்கான காலிறுதியில் இந்தியாவின் அனாஹத் சிங், எகிப்தின் சனா இப்ராஹிம் மோதினர். முதலிரண்டு செட்களை 8-11, 8-11 என இழந்த அனாஹத், பின் எழுச்சி கண்டு அடுத்த 3 செட்களை 11-7, 11-8, 11-7 எனக் கைப்பற்றி பதிலடி கொடுத்தார். முடிவில் அனாஹத் 3-2 (8-11, 8-11, 11-7, 11-8, 11-7) என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
ஆண்களுக்கான காலிறுதியில் இந்தியாவின் வீர் சோட்ரானி, இங்கிலாந்தின் டெக்லான் ஜேம்ஸ் மோதினர். இதில் ஏமாற்றிய வீர் சோட்ரானி 1-3 (11-8, 6-11, 12-14, 9-11) என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈஷாவிற்கு வருகை தரும் மக்களுக்கு இலவச யோக வகுப்புகள்
-
தமிழகத்திற்கான அறிவிப்புகளை பட்ஜெட்டில் வெளியிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
-
ஜனவரி மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.93 லட்சம் கோடி
-
வெனிசுலாவின் கச்சா எண்ணெயை இந்தியா வாங்கும்; அதிபர் டிரம்ப் நம்பிக்கை
-
தைப்பூச நாளில் முருகன் கோவில்களில் திரண்ட பக்தர்கள்; காவடி எடுத்தும், வேல் குத்தியும் நேர்த்திக்கடன்
-
'உயர்ந்த எண்ணங்கள் இருந்தால் வெற்றியின் உச்சத்தை தொடலாம்'
Advertisement
Advertisement