தொடர்ச்சியான முதலீடுகளால் அனைத்துப் பகுதிகளிலும் சமமான வளர்ச்சி: துணை ஜனாதிபதிசி.பி. ராதாகிருஷ்ணன்
புதுடில்லி: உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுலாவில் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான முதலீடுகள்,இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் சமமான வளர்ச்சியை அளித்துள்ளது என்று துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
டில்லி செங்கோட்டையில் இன்று பாரத் பர்வ்-2026 நிறைவு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதிசி.பி. ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
கடந்தாண்டில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 400 கோடியைத் தாண்டியுள்ளது. இது நாட்டின் மீதான மக்களின் நம்பிக்கையை காட்டுகிறது.
முன்பு போக்குவரத்து வசதி குறைவாக இருந்த பகுதிகளும் தற்போது உள்கட்டமைப்பு மேம்பாட்டால் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள உலகின் மிக உயரமான செனாப் ரயில்வே பாலம்,தமிழ்நாட்டின் புதிய பாம்பன் பாலம் போன்ற சாதனைகள் முக்கியமானது.டிஜிட்டல் அதிகாரம், நிதி உள்ளடக்கம் மற்றும் சமூக பாதுகாப்பு ஆகியவை இந்தியாவின் அடித்தளத்தை மாற்றியமைத்து வருகிறது.
இந்தியாவின் மூலதனச் செலவு 2025--26 நிதியாண்டில் ₹11.21 லட்சம் கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது, இது நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சியை மேலும் வேகப்படுத்தும்.இவ்வாறு சி.பி. ராதாகிருஷ்ணன் பேசினார்.
மேலும்
-
ஈஷாவிற்கு வருகை தரும் மக்களுக்கு இலவச யோக வகுப்புகள்
-
தமிழகத்திற்கான அறிவிப்புகளை பட்ஜெட்டில் வெளியிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
-
ஜனவரி மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.93 லட்சம் கோடி
-
வெனிசுலாவின் கச்சா எண்ணெயை இந்தியா வாங்கும்; அதிபர் டிரம்ப் நம்பிக்கை
-
தைப்பூச நாளில் முருகன் கோவில்களில் திரண்ட பக்தர்கள்; காவடி எடுத்தும், வேல் குத்தியும் நேர்த்திக்கடன்
-
'உயர்ந்த எண்ணங்கள் இருந்தால் வெற்றியின் உச்சத்தை தொடலாம்'