ஆஸ்திரேலிய ஓபனில் அல்காரஸ் சாம்பியன்; சாதனையை தவறவிட்டார் ஜோகோவிச்
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இளம் வீரர் அல்காரஸ், அனுபவ வீரர் ஜோகோவிச்சை தோற்கடித்து முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் பைனலில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 22 வயதேயான அல்காரஸூம், செர்பியாவின் அனுபவ வீரர் ஜோகோவிச்சும் ,38, பலப்பரீட்சை நடத்தினர். பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் செட்டை 2-6 என்ற கணக்கில் இழந்த அல்காரஸ், அதன்பிறகு ஜோகோவிச்சை ஆதிக்கம் செலுத்த விடவில்லை.
6-2,6-3,7-5 என்ற கணக்கில் அடுத்தடுத்த 3 செட்களையும் கைப்பற்றி முதல்முறையாக ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரின் பட்டத்தை கைப்பற்றியுள்ளார். அதுமட்டுமில்லாமல், 22 வயதேயான அல்காரஸ், மிக இளம் வயதில் கிரான்ட்ஸ்லாம் வரலாற்றில் (ஆஸ்திரேலியா ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் ஓபன், அமெரிக்க ஓபன்) 4 தொடரிலும் சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இது அவருக்கு 7வது கிரான்ட்ஸ்லாம் பட்டமாகும்.
அதேவேளையில், அனுபவ வீரரான ஜோகோவிச், ஆஸ்திரேலிய ஓபனில் 10 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இந்தப் போட்டியில் அவர் வெற்றி பெற்றிருந்தால், ஒட்டுமொத்தமாக 25வது கிரான்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றிருப்பார். ஆனால், தற்போது, அந்த சாதனை கைநழுவி போனது.
மேலும்
-
இந்த முறை பிராந்திய போராக இருக்கும்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை
-
சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத 68,000 அரசு ஊழியர்களின் சம்பளம் நிறுத்தம்; உ.பி. அரசு அதிரடி
-
தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவுக்காக காங்., காத்திருப்பு; முதலில் பேச அழைக்கும் என எதிர்பார்ப்பு
-
மத்திய பட்ஜெட்டில் கேரளா மிஸ்ஸிங்; சசிதரூர் விமர்சனம்
-
நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏமாற்றமில்லை; அமைச்சர் பியுஷ் கோயல்
-
கம்போடியா... காரைக்கால் அம்மையார்... கமல்... நான்!