தமிழக உலகளாவிய சுற்றுலா மாநாடு; முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்து
சென்னை: மாமல்லபுரத்தில் இன்று தமிழக உலகளாவிய சுற்றுலா மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
தமிழகத்தின் பண்டைய கால பாரம்பரிய, கலாசாரம் உணர்த்தும் நினைவுச்சின்ன இடங்கள், இறைசக்தி மிகுந்த கோவில்கள், மனம், உடலிற்கு புத்துணர்வு அளிக்கும் இயற்கை சுற்றுச்சூழல் இடங்கள், உல்லாச பொழுதுபோக்கு கடற்கரை பகுதிகள் என, அதிகளவில் சுற்றுலா பகுதிகள் உள்ளன. உள்நாட்டு, சர்வதேச பயணியர் ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்றனர்.
இதன் மூலம் இப்பகுதியில் பொருளாதார வளர்ச்சியும் ஏற்படுகிறது. சுற்றுலாவிற்கு வாய்ப்புள்ளதாக, மேலும், 300 புதிய சுற்றுலா மையங்களை தமிழக அரசு கண்டறிந்து, அப்பகுதிகளை மேம்படுத்தவும் முடிவெடுத்து, நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆசியாவில் சுற்றுலா முதலீட்டிற்கு ஏற்ற முக்கிய களமாக தமிழகத்தை உருவாக்க கருதி, உலகளாவிய சுற்றுலா மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, தமிழக சுற்றுலாத்துறை, தொழில்துறை இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு, மாமல்லபுரத்தில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
முதல்வர் ஸ்டாலின், இன்று மாநாட்டை துவக்கி வத்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், தொழில்துறை அமைச்சர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்த மாநாட்டில் வனம், மலைவாழிட சுற்றுலா, யுனெஸ்கோ அங்கீகார பாரம்பரிய இடங்கள் உள்ளிட்டவை குறித்து, டிஜிட்டல் முறையில் கதையாக கூறுவது, விளையாட்டு, மருத்துவம், சாகசம் ஆகிய சுற்றுலாக்கள் குறித்தும் விவாதித்து, திட்டங்களுக்கு முடிவெடுக்கப்பட உள்ளன.
ஐந்தாண்டுகள் ஆழ்ந்த உறக்கம் - இப்போது சில பாவலாக்கள்
தமிழ் தேர்வில்.8 லட்சம் ஆசிரியர்கள் தோல்வி.... ஹி.. ஹி
ஐயா சாமிகளா ஒங்க ஆட்சி முடிய இன்னும் இரண்டு மாதம் மட்டும்தான் இருக்கிறது அதுவரை நாங்கள் எப்படியாவது சகிச்சுக்கிறோம். மேற்கொண்டு புதிய திட்டம், புரிந்துணர்வு ஒப்பந்தம், என்று சொல்லி மக்களை ஏமாற்றாம சீக்கிரம் மூட்டை முடிச்சுகளை கட்டிட்டு கெளம்புங்க. அப்றம் அப்படியே அந்த ஈ.வெ.ராமசாமி நாச்சியப்பன் பாத்திரக் கடையில் யுனெஸ்கோ விருது வாங்கியதையும் டிஜிட்டல் முறையில் கதையாக சொல்ல ஏற்பாடு செஞ்சுட்டீங்கன்னா உங்களுக்கு புண்ணியமா போகும்.
ரீலு வுடு நைனா.
தேர்தல் வருகிறது துண்டுசீட்டு கோமாளி நைனா தினந்தோறும் உருட்டி விளையாடுவார் காசா பணமா நீ அடிச்சி உடு நைனா
மாநில பணி குடிநீர், கழிவு நீர் அகற்றல், ஆரம்ப கல்வி, பொது சுகாதாரம், 100 சதவீதம் பிறப்பு, இறப்பு பதிவு, ஊருக்கு தேவையான சுடுகாடு, நூல் நிலையம், பூங்கா மற்றும் சில. வினாடிக்கு வினாடி நிதி விரயம். தகுதிக்கு மீறிய உலகளாவிய சுற்றுலா மாநாடு. சுற்றுலா வளர சுற்றுப்புறம் சுத்தமாக இருக்க வேண்டும். திருச்சி பஸ் நிலையம் இயந்திரம் கொண்டு சுத்த படுத்த படுகிறது. பல பஸ் நிலையம் படு மோசம். பன்மொழி பேசும் திறன் தேவை. திராவிட அதிகாரிகள் இருமொழி மட்டும் அறிவர். ஒப்பந்தம் இழப்பு நம் தலையெழுத்து.
என்ன திடீரென "தமிழக" என்ற வார்த்தை, தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு அரசு என்று தேவையற்ற பிரச்சனை தூண்டிய விடியாத விடியலின் அடுத்த பல்டி..
வெறும் ஒப்பந்தங்கள் மட்டும் கையெழுத்தாகும். ஒன்றும் நடைமுறைக்கு வராது. ஊரை ஏமாற்றும் ஒப்பந்தங்கள்.
தமிழ்நாட்டின் எந்த சுற்றுலா தளமோ, கோவில்களோ எங்கும் குப்பைகள், பாட்டில்கள் தான் உள்ளது, தேவையான குப்பை சேகரிக்கும், குப்பை அகற்றும் முறை மிக மிக குறைவு. இதை சரிபன்னாமல் சுற்றுலா விளங்காது.
சுற்றுலா துறை முன்னேற்றம் மாநிலத்துக்கும் தேசத்திற்கும் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்ககூடியது. தாமதமான முன்னெடுப்பு என்றாலும் தேவையானது.
ஐயா இது நைனாவின் தேர்தல் உருட்டுனு இன்னுமா புரியல ஹீஹீஹீமேலும்
-
டிரம்ப்பிற்கு இந்திய மக்கள் சார்பில் நன்றி: பிரதமர் மோடி
-
இந்திய பொருட்கள் மீதான வரி குறைப்பு: வர்த்தக ஒப்பந்தம் இறுதியானதாக டிரம்ப் அறிவிப்பு
-
இந்திய அணி அசத்தல் வெற்றி * உலக கோப்பை பயிற்சியில்...
-
ஹாக்கி உலக கோப்பைக்கு தகுதி * முன்னாள் கேப்டன் சவிதா நம்பிக்கை
-
பாட்மின்டன்: அசத்துமா இந்தியா
-
மல்யுத்தம்: ஹரியானா 'சாம்பியன்'