மற்றொரு ஊழல் வழக்கு: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டு சிறை

3


டாக்கா: வங்கதேசத்தில் அரசு நில ஒதுக்கீட்டில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.


வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளன. அதில் அவருக்குமரண தண்டனை, சிறை தண்டனை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.


இந்நிலையில் அரசு குடியிருப்பு திட்டத்தில் நில ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட இரண்டு முறைகேடு வழக்குகளில் ஷேக் ஹசீனாவுக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.


மேலும் இந்த வழக்கில் ஹசீனாவின் சகோதரி ஷேக் ரெஹானாவின் மகள் துலிப் ரிஸ்வானாவுக்கு இரண்டு வழக்குகளில் தலா 2 ஆண்டுகள் சிறை என மொத்தம் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. தற்போது இவர் பிரிட்டன் எம்பி ஆக உள்ளார்.அந்நாட்டின் முன்னாள் அமைச்சராகவும் இவர் பதவி வகித்துள்ளார்.


ஷேக் ஹசீனாவின் மகன் ருத்வான் முஜிப் சித்திக்கிற்கு 7 ஆண்டு சிறை விதிக்கப்பட்டு உள்ளது.

Advertisement