இந்தியா கேட் போன்று அமெரிக்காவிலும் வளைவு: டிரம்ப் ஆசை
வாஷிங்டன்: டில்லியில் உள்ள இந்தியா கேட் போன்று வாஷிங்டன்னிலும் வளைவு ஒன்றை கட்ட திட்டமிட்டுள்ள அதிபர் டிரம்ப், அது மிகச் சிறந்ததாக இருக்கும் எனக்கூறியுள்ளார்.
அமெரிக்கா சுதந்திரம் பெற்று 250வது ஆண்டு விழாவை முன்னிட்டு, வாஷிங்டன்னில் மிகப்பெரிய வளைவு ஒன்றை கட்ட திட்டமிட்டுள்ளார். அது 250 அடி உயரம் கொண்டதாக அமைக்க திட்டமிட்டு வருகிறார். இதற்கான 123 அடி மற்றும் 165 அடி உயரம் கொண்ட திட்டம் தயாரிக்கப்பட்டு டிரம்ப்பிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், அதனை நிராகரித்து விட்டதாகவும், பார்வையாளர்களை கவரும் வகையில், அது மிகப்பெரியதாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், நமது நாட்டு தலைநகர் டில்லியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட டில்லி கேட் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள டிரம்ப், அத்துடன்,' இந்தியாவின் அழகான வெற்றி வளைவு; அதைவிட எங்களுடையது மிகச்சிறப்பானதாக இருக்கும்,' எனத் தெரிவித்துள்ளார்.
அடடே.. அந்நிய அடையாளமா அது?
இந்திய கேட் இந்திய சுதந்திரத்திற்க்காக பாடுபட்டு உயிர் நீத்த வீரதியாகிகளின் புனிதமான வாழ்வு இடம்
அதற்கும் அமெரிக்காவில் கட்ட நினைக்கும் சின்னத்திற்கும் சம்பந்தமே இல்லை இது டிரம்பின் முயற்சியில் அவரது பெயர் அதிலே சூட்ட வேண்டும் என்ற நப்பாசைதான் அமெரிக்க சுதந்திரத்திற்கும் வரி போடும் எண்ணெய் வியாபாரி டிரம்புக்கும் எந்த தொடப்பும் கிடையாது
இந்தியா கேட்டை விட காசு பாக்க நல்ல திட்டம் இந்தியாவில் உள்ள டோல் கேட்கள் தான். காலாவதியான பிறகும் மக்களை உறிஞ்சி கொள்ளையடிக்கலாம்.
இந்தியா கேட் வளைவு போன்று கிரீஸில் உள்ள பாழடைந்த கட்டிட அமைப்புகளில் கூட காணப்படுகிறது. ஏதோ மர்மம் ஒலிந்து இருப்பது போன்று ஒரு பிம்பத்தை காட்டுகிறது. அப்படி என்ன அதில் ரகசியம் அடங்கி இருக்கிறது என்பதை ஆராய்ந்து தான் பார்க்க வேண்டும்.மேலும்
-
ஆஸி.யில் காந்தி சிலை சேதம்; இந்தியா கடும் கண்டனம்
-
போயிங் விமானத்தில் சுவிட்ச் பழுது : தெளிவுபடுத்தியது சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம்
-
போட்டி நாடுகளை காட்டிலும் சிறப்பான வர்த்தக ஒப்பந்தம்: பியூஷ் கோயல்
-
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் மிக பெரிய முடிவு; தேஜ கூட்டணி எம்.பி.க்களிடம் மனம் திறந்த பிரதமர் மோடி
-
யுபிஐ பயன்பாட்டில் புது உச்சம்: ரூ.230 லட்சம் கோடி பணப்பரிமாற்றம்
-
அதிகமான உப்பு நுகர்வு குறித்து மத்திய அரசு தீவிர விழிப்புணர்வு:ராஜ்யசபாவில் ஜே.பி. நட்டா தகவல்