கறிக்கோழி பண்ணை விவசாயிகள் முறையீடு
ஈரோடு: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க, ஈரோடு மாவட்ட செயலர் நடராஜன் மற்றும் கறிக்கோழி பண்ணை விவசாயிகள் என நுாற்றுக்கும் மேற்பட்டோர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., சாந்தகுமாரிடம், நேற்று மனு வழங்கி கூறியதாவது: கறிக்கோழி வளர்ப்புக்கான உற்பத்தி செலவு உயர்ந்துள்ளதால், வளர்ப்பு கூலியை, 6.50 ரூபாயில் இருந்து, 20 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். பண்ணை நாட்டு கோழி வளர்ப்புக்கு, 25 ரூபாய், காடை வளர்ப்புக்கு, ஏழு ரூபாய் நிர்ணயிக்க வேண்டும்.
முத்தரப்பு கூட்டத்தை மீண்டும் நடத்தி நியாயமான உயர்வு தர வேண்டும். ஆண்டுதோறும் உயர்த்த வேண்டும். கறிக்கோழி பண்ணை விவசாயிகளுக்காக தனி நலவாரியம் அமைக்க வேண்டும். கோழி பிடித்ததில் இருந்து, ஒரு வாரத்துக்குள் வளர்ப்பு கூலியை நிறுவன வழங்க நடவடிக்கை வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தோம். இவ்வாறு கூறினர்.
மேலும்
-
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்; அதிபர் டிரம்ப் தகவல்
-
லிபியா முன்னாள் அதிபரின் மகன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை
-
ஆர்எஸ்எஸ் முகாம் நடத்திய பள்ளிக்கு நோட்டீஸ் ஏன்? பதிலளிக்க அரசுக்கு உத்தரவு
-
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சிக்கு முடிவு முதல் உலக கோப்பை பயிற்சி போட்டி வரை; இன்றைய முக்கிய நிகழ்வு (பிப்.,04)!
-
கர்நாடகா அமைச்சர் மீது ரூ.6 ஆயிரம் கோடி ஊழல் புகார்; சட்டசபையில் பாஜ எம்எல்ஏக்கள் விடிய விடிய போராட்டம்
-
அமெரிக்காவில் 500 பில்லியன் டாலர் முதலீடு செய்ய பிரதமர் மோடி உறுதி; வெள்ளை மாளிகை தகவல்