இந்திய பொருட்கள் மீதான அமெரிக்க வரி குறைந்தது; மகிழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் பதிவு!

11

நமது நிருபர்




இந்தியா மீதான வரிகளை 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அமெரிக்கா குறைந்துள்ளது. இந்த ஒப்பந்தம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இது குறித்து மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, பியுஷ் கோயல், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு:


மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியுஷ் கோயல்


வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்திற்காக பிரதமர் மோடிக்கும், அதிபர் டிரம்புக்கும் வாழ்த்துகள். இந்தியா-அமெரிக்க உறவுகளை வலுப்படுத்துவதில் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவத்திற்கு பிரதமர் மோடிக்கும், அதிபர் டிரம்புக்கும் நன்றி. இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு அமைதி, வளர்ச்சி மற்றும் ஒரு பொன்னான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும்.



இந்த ஒப்பந்தம், விவசாயிகள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உலகத்திற்காக இந்தியாவில் புதுமைகளைப் படைப்பதற்கும் முன்னோடியில்லாத வாய்ப்புகளை ஏற்படுத்தும். இது அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு தொழில்நுட்பத்தைப் பெற உதவும். இது வெறும் வர்த்தக ஒப்பந்தம் மட்டுமல்ல.


இது இந்தியா-அமெரிக்க உறவுகளை வலுப்படுத்தி உள்ளது. 2047ம் ஆண்டிற்குள் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கிய பயணத்தை விரைவுபடுத்தும் ஒரு வரலாற்றுத் திருப்புமுனையாகும்.


மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்ப் ஆகியோருக்கு இடையேயான உரையாடலைத் தொடர்ந்து, இருதரப்பு வர்த்தகம் குறித்த அறிவிப்புகளை வரவேற்கிறோம். இது இரு நாடுகளின் பொருளாதாரங்களிலும் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.


வளர்ச்சி மற்றும் புத்தாக்கத்தை ஊக்குவிக்கும். இது 'மேக் இன் இந்தியா' முயற்சிகளை வலுப்படுத்தி, நம்பகமான தொழில்நுட்ப உறவுகளை ஊக்குவிக்கும். ஒரு வலுவான பொருளாதார உறவே நமது உறவுக்கு மிக முக்கியமான அடித்தளமாகும்.



பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

இந்தியா-அமெரிக்க உறவுகளில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாக, ஒரு முக்கிய வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இது வரிகளை கணிசமாகக் குறைத்துள்ளது. இந்த ஒப்பந்தத்தை எட்டியதற்காக பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இது நமது உறவை மேலும் வலுப்படுத்தும். இரு நாடுகளுக்கும், மக்களுக்கும் நன்மைகளை வழங்கும். இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்தியா-அமெரிக்க பொருளாதார உறவுகள் புதிய உச்சங்களை எட்ட உள்ளன.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா


இந்தியா-அமெரிக்க உறவுகளுக்கு இது ஒரு முக்கியமான நாள். வலுவான வர்த்தக உறவுகளுக்கும் பரஸ்பர வளர்ச்சிக்கும் வழிவகுக்கிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்திற்காக பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்ப் ஆகியோருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது நமது உறவை மேம்படுத்தி, இரு நாடுகளுக்கும் அதன் மக்களுக்கும் பெரும் பயனளிக்கும். இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான வர்த்தகம் மேலும் செழிக்க உள்ளது.



மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

அமெரிக்காவும் இந்தியாவும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளாகும். இரு நாடுகளும் கூட்டாளிகள். இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து அமைதி மற்றும் வளர்ச்சிக்காகப் பணியாற்றுகிறது. இரு நாடுகளும் இணைந்து தொழில்நுட்பங்களை உருவாக்கி, உலகிற்குப் பயனளிக்கும் தீர்வுகளை உருவாக்க முடியும்.


அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் ஒரு பொன்னான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும். இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இரு தரப்பினருக்கும் நன்மை பயக்கும் ஒரு ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளின் மக்களும், தொழில்துறையினரும் பெரிதும் பயனடைவார்கள்.

Advertisement