லோக்சபாவில் அமளி: சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் உள்பட 8 எம்பிக்கள் சஸ்பெண்ட்
புதுடில்லி: ராகுலை பேச அனுமதிக்கவில்லை எனக்கூறி அமளியில் ஈடுபட்டதுடன் மேஜை மீது ஏறியும், போராட்டத்தில் ஈடுபட்டதாக லோக்சபாவில் காங்கிரஸ் எம்பிக்கள் 7 பேர் மற்றும் கம்யூனிஸ்ட் எம்பி சு.வெங்கடசன் ஆகியோர் இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நேற்று ராகுல் பேசும போது முன்னாள் ராணுவ தளபதி எழுதி வெளியிடப்படாத புத்தககத்தில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் குறித்து குறிப்பிட்டார். இதற்கு ஆளுங்கட்சி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, சீன ஊடுருவல் குறித்து ராகுலை பேசவிடவில்லை எனக்கூறி காங்கிரஸ் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். மேஜை மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சபாநாயகர் இருக்கை நோக்கி காகிதங்களை வீசியதாக குற்றம்சாட்டப்பட்டது.
மாணிக்கம் தாகூர் , ஹிபி ஈடன், அம்ரிந்தர் ராஜா வாரிங் உள்ளிட்ட 8 எம்பிக்கள் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கான தீர்மானத்தை லோக்சபாவில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கொண்டு வந்தார். அவர்கள் இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் விவரம்:
ஹிபி ஈடன்
கிரண் குமார் ரெட்டி
குர்ஜித் சிங் அயுக்லா
அமரிந்தர் சிங்ராஜா வாரிங்
மாணிக்கம் தாகூர்
பிரசாந்த் படோல்
தியோன் குரியாகோஸ்
வெங்கடேசன்
போராட்டம்
சஸ்பெண்ட் செய்யப்பட்டதை தொடர்ந்து பார்லிமென்ட் வளாகத்தில் ராகுல் தலைமையில் இண்டி கூட்டணி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெங்கடேசன் பிடறியில் அடித்து வெளியே இழுத்து தள்ளப்படும் அளவுக்கு மிகவும் கண்ணியமான உறுப்பினர்...எனவே..... தாராளமாக செய்யலாம்....
நிரந்தரமாக சஸ்பெண்ட் செய்து சம்பளம் படி எல்லாம் நிறுத்த வேண்டும் .
நாட்டின் இறையாண்மை க்கு எதிரானவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்......வளர்ச்சி பிடிக்காது
இந்த சுய வெங்கடேசன் தீயமுக வின் கால் வருடி. இந்திய இறையாண்மையின் நிரந்தர எதிரி.
பாஸ் உங்களுக்கு குசும்பு, அவரு பெயருக்கு முன்னாள் அது தப்பு
இவர்களை தேர்ந்தெடுத்தார்கள்
வெட்கி தலைகுனிய வேண்டும்
நிரந்தரமாக நீக்கியிருக்க வேண்டும்.
செங்கோல் பற்றி முழுவதும் அபத்தமான கதை சொல்லி எதிர்ப்பு தெரிவித்த கம்யூனிச வெங்கடேசனை தேர்ந்தெடுத்த மதுரையின் தமிழ் பேசும் குடிமக்கள் அந்த பாவத்தை போக்க அதிமுக பாஜக கூட்டணியை வெற்றி பெற வைக்க சட்டசபை தேர்தலில் தேஜ கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். பாராளுமன்றத்தை கோயில் ஆடல் பாடல் மேடை போல கூச்சல் மேடை ஆக்கிய இந்த ராகுல் கும்பலை செயலற்று போகும்படி .செய்யவேண்டும். ஜெயிச்சு ஆட்சி நடத்துபவன் எதிர்கட்சிக்காரர்களின் பேச்சை கேட்க வேண்டியதில்லை இவர்கள் கத்தி கத்தி
ஓயவேண்டியது தான்
பாராளுமன்ற கேண்டீனில் போய் அமர்ந்து கொண்டு இட்லி வடை சாம்பார் சாப்பிட... போராட்டம் என்ற பெயரில் கூத்து அடித்து கொண்டு இருக்கிறார்கள்.
சஸ்பென்ஷன் என்றால் எல்லா பண பலன் களும் நிறுத்தப்படுமா சம்பளம் allowance உட்பட ?
கிரண் அவர்களுக்கு கிரேட் சல்யூட். கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்டு. கிரேட். அப்படியே 365 நாட்களும் சஸ்பெண்டு பண்ணிடுங்க. பாரலிமெண்ட் வளாகத்தில் எந்த கேட்டிலும் நுழைய முடியாத படி பண்ணிடுங்க. இவனுங்க பேசுவதை கேட்கும் போது எங்களுக்கு பிபி எகிறுது.மேலும்
-
தகவல் சுரங்கம்: உலக புற்றுநோய் தினம்
-
அபிஷேக் சர்மாவின் 'கமாண்டோ' பயிற்சி * 'சிக்சர்' விளாசும் பின்னணி
-
இங்கிலாந்திடம் வீழ்ந்தது ஆஸி., * யூத் உலக கோப்பை அரையிறுதியில்
-
எமிரேட்சை சாய்த்தது நேபாளம் * 'டி-20' உலக கோப்பை பயிற்சியில்...
-
சென்னையில் டேபிள் டென்னிஸ் * பிப். 10ல் துவங்குகிறது
-
கால்பந்து: தமிழகம் ஏமாற்றம்