பிரதமர் மோடியின் தாய் பெயரில் தொடங்கப்பட்ட திட்டம்; இஸ்ரேலில் நடப்பட்ட 300 மரக்கன்றுகள்
ஜெருசலேம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்த தாயின் பெயரில் ஒரு மரம் என்ற திட்டத்தை பின்பற்றி இஸ்ரேலில் 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி கடந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, இயற்கையை பாதுகாக்கும் வகையில் தாயின் பெயரில் ஒரு மரம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். பிற நாடுகளிலும் இந்த திட்டம் பெரும் வரவேற்பு பெற்றது.
அந்த வகையில், மேற்காசிய நாடான இஸ்ரேலின் தெற்கு பகுதியில் உள்ள மோஷாவ் நெவாடிம் என்ற இடத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
'து பிஷ்வாட்' என்று அழைக்கப்படும் யூதர்கள் கொண்டாடும் மரங்களின் புத்தாண்டு பண்டிகையையொட்டி, அங்கு 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்திய தூதரகமும், அங்குள்ள வன அமைப்பும் இணைந்து மர நடுவிழாவை நடத்தின. இது இந்தியா, இஸ்ரேல் இடையேயான சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கலாசார தொடர்புகளை பிரதிபலிப்பதாக அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
மேலும்
-
நிருபர்களை தாக்கிய திமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்; விஜய் வலியுறுத்தல்
-
சமூக நீதியின் கட்டமைப்பை பலவீனப்படுத்திய மத்திய அரசு; ராஜ்யசபாவில் கார்கே குற்றச்சாட்டு
-
துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும் சட்டம்; ஐகோர்ட் தடையை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்
-
நடுவானில் துருக்கி விமானத்தில் தீ: பயணிகள் 236 பேர் தப்பினர்!
-
தேசியவாத காங்கிரஸ் இணைப்பு விவகாரத்தில் தொடர்ந்து நீடிக்கும் இழுபறி: மனம் திறந்தார் சரத் பவார்
-
2.5 கோடி பேரின் ஆதார் எண்கள் முடக்கம்: மோசடியை தடுக்க நடவடிக்கை