2.5 கோடி பேரின் ஆதார் எண்கள் முடக்கம்: மோசடியை தடுக்க நடவடிக்கை
புதுடில்லி: நாடு முழுவதும் இறந்து போன 2.5 கோடிக்கும் மேற்பட்டவர்களின் ஆதார் எண்கள் முடக்கப்பட்டு உள்ளதாக அதனை நிர்வகிக்கும் யுஐடிஏஐ அமைப்பு கூறியுள்ளது.
உலகளவில் மிகப்பெரிய பயோமெட்ரிக் அடையாள அமைப்பாக ஆதார் உள்ளது.நாடு முழுவதும் 134 கோடிபேரிடம் ஆதார் உள்ளது. வங்கிக்கணக்கு துவங்குவது முதல் பான் கார்டு பெறுவது வரையிலும், அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கும் ஆதார் முக்கியமானதாக உள்ளது.
இந்நிலையில் ஆதார் பட்டியலின் துல்லியம் மற்றும் அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் 2.5 கோடிக்கும் மேற்பட்டவர்களின் ஆதார் எண்கள் முடக்கப்பட்டு உள்ளதாக யுஐடிஏஐ தெரிவித்துள்ளது. இறந்தவர்களின் ஆதார் எண்கள் முடக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு, ஒருவர் இறந்தால் அவரின் ஆதார் எண்களை முடக்குவது அவசியம்.
இதன் மூலம் மோசடி நடப்பதை தடுக்கவும், அந்த எண்ணை பயன்படுத்தி அரசின் நலத்திட்டங்களை தவறான முறையில் கிடைப்பதை தடுக்க முடியும் எனத் தெரிவித்துள்ளது.
டெத் செர்டிபிகேட் கொடுப்பதற்கு முன் ஆதார் எண் நீக்கப்படவேண்டும் . மரணத்தினால் ஆதார் நீக்கப் பட்டால் , தானாகவே வோட்டர் கார்டும் பான் கார்டும் நீக்கப்படவேண்டும் . இது இந்தக்கால கம்ப்யூட்ர் , AI மூலம் சாத்தியம்
மயானத்தில் தகனம் செய்யும் போது ஆதார் அட்டை விவரங்களை கேட்பது எதற்காக? அந்த விவரங்களை வைத்து அவ்வப்போது நீக்கி இருக்கலாமே?
இறந்தவர்களின் ஆதார் எண்களை முடக்குவதுடன் அவர்களது ஓட்டு போடும் உரிமையையும் பறிக்க வேண்டும். குன்றிய டாஸ்மாக்கினிஸ்தானில் தேர்தல்களில் இறந்தவர்களே அதிக ஓட்டு போடுகின்றனர்.மேலும்
-
சூரிய புயலின் ரகசியம் உடைந்தது
-
தமிழக அமைச்சரவை கூட்டம் முதல் பெண்கள் பிரிமியர் லீக் இறுதிப்போட்டி வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்.,05)!
-
தாவரங்களுக்குள் ஒளிந்திருக்கும் பாக்டீரியா வித்தைகள்
-
எடிசனின் மின்விளக்கில் 'கிராபீன்' ஒளிந்திருந்ததா?
-
நெல்லை கொள்முதல் செய்த அதிகாரிகள்
-
'மாஜி' அமைச்சர் பிரசுரம் வழங்கல்