மக்கள் தொண்டைத் தொய்வின்றித் தொடர்வோம்; முதல்வர் ஸ்டாலின்
சென்னை: கல்விக்கும், மருத்துவ சேவைக்கும் ஒதுக்கும் நிதி, செலவு அல்ல, வருங்காலச் சமுதாயத்துக்கான முதலீடு. எனவே மக்கள் தொண்டைத் தொய்வின்றித் தொடர்வோம் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை;
நம் திராவிட மாடலின் இருகண்களாய் விளங்கும் இத்துறைகளில் நாட்டுக்கே முன்னோடியான பல திட்டங்களை, பல கோடி மக்கள் பயனடையச் சிறப்புற நிறைவேற்றி வருகிறோம்.
இந்த வகையில், நாம் உருவாக்கிய கருணாநிதி நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை, அரிய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நடத்தி ஏழை, எளிய மக்களுக்குத் தரமான சிகிச்சை தருவதில் முத்திரை பதித்துள்ளது.
சிறிய நகரங்களிலும் கூட சிக்கலான அரசு மருத்துவமனைகளில் சவாலான அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு உயிர் காக்கும் உயரிய பணியை, அர்ப்பணிப்பு மிகுந்த மருத்துவக் குழுவினர் செய்து வருவது நாளும் செய்திகளில் இடம்பெறுவது பெருமிதத்தை அளிக்கிறது.
அரசு மருத்துவமனைகளை நாடி வரும் ஏழை, எளிய மக்களின் எண்ணிக்கை கடந்த நான்கரை ஆண்டுகளில் பன்மடங்கு அதிகரித்து இருப்பது, அரசின் மருத்துவக் கட்டமைப்பின் மீதும், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களின் திறமை மற்றும் அக்கறையின் மீதும் மக்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையைக் காட்டுகிறது. மக்கள் தொண்டைத் தொய்வின்றித் தொடர்வோம்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மக்கள் தொண்டையை தொய்வின்றி அறுக்கிறார் இன்னும் அறுபதே நாட்கள் இந்த எழவு இம்சை
பாஸ், கொள்ளையடிப்பது மக்கள் தொண்டு அல்ல. அது மக்கள் தொண்டையை நெரிப்பது.
Please help to eradicate dangerous threats like dengue/malaria causing mosquitoes and help Sanatan Dharma to thrive by not electing dmkமேலும்
-
நிருபர்களை தாக்கிய திமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்; விஜய் வலியுறுத்தல்
-
சமூக நீதியின் கட்டமைப்பை பலவீனப்படுத்திய மத்திய அரசு; ராஜ்யசபாவில் கார்கே குற்றச்சாட்டு
-
துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும் சட்டம்; ஐகோர்ட் தடையை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்
-
நடுவானில் துருக்கி விமானத்தில் தீ: பயணிகள் 236 பேர் தப்பினர்!
-
தேசியவாத காங்கிரஸ் இணைப்பு விவகாரத்தில் தொடர்ந்து நீடிக்கும் இழுபறி: மனம் திறந்தார் சரத் பவார்
-
2.5 கோடி பேரின் ஆதார் எண்கள் முடக்கம்: மோசடியை தடுக்க நடவடிக்கை