கால்பந்து: இந்தியா வெற்றி

புதுடில்லி: நட்பு கால்பந்து போட்டியில் இந்திய பெண்கள் அணி 1-0 என ஜெர்மனியின் ஹெர்த்தா அணியை வென்றது.
ஆஸ்திரேலியாவில், பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் 21வது சீசன், 2026, மார்ச் 1-26ல் (12 அணிகள்) நடக்கவுள்ளது. இதன் தகுதிச்சுற்றில் அசத்திய இந்திய அணி, முதன் முறையாக தகுதி பெற்று அசத்தியது. இந்திய அணி தனது போட்டியில் வியட்நாமை (மார்ச் 4, இடம்: பெர்த்) சந்திக்க உள்ளது.
தற்போது, இத்தொடருக்கு தயாராகும் வகையில் துருக்கி சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, நட்பு கால்பந்து போட்டிகளில் பங்கேற்றுள்ளது.
அன்டல்யா நகரில் நடந்த போட்டியில் இந்திய அணி, ஜெர்மனியின் ஹெர்த்தா பிராவுயன் அணியை எதிர் கொண்டது.
37வது நிமிடத்தில் இந்தியாவின் கிரேஸ், ஒரு கோல் அடித்து கை கொடுத்தார்.
முடிவில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இன்று தனது இரண்டாவது போட்டியில் ரஷ்யாவின் ஜிவெஸ்டா பெர்ம் அணியை சந்திக்கிறது இந்தியா.

Advertisement