வரதராஜ பெருமாள் கோவிலில் தெப்போத்சவம் நிறைவு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த தெப்போத்சவம் நேற்றுடன் நிறைவு பெற்றது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் தெப்ப குளத்தில் ஆண்டு தோறும், தை பவுர்ணமியன்று தெப்போத்சவம் துவங்கி, தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும். அதன்படி நடப்பு ஆண்டுக்கான முதல் நாள் தெப்போத்சவம் பிப்., 1ம் தேதி இரவு 7:00 மணிக்கு துவங்கியது.
இதில், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், பெருந்தேவி தாயார், ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாருடன், வரத ராஜ பெருமாள் 'அனந்தசரஸ்' என அழைக்கப்படும் தெப்ப குளத்தில் எழுந்தருளி, மூன்று முறையும், இரண்டாம் நாளான நேற்று முன் தினம் ஐந்து முறையும், தெப்போத்சவம் நிறைவு நாளான நேற்று, ஏழு முறையும் தெப்பத்தில் உலா வந்தார்.
தெப்போத்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்; அதிபர் டிரம்ப் தகவல்
-
லிபியா முன்னாள் அதிபரின் மகன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை
-
ஆர்எஸ்எஸ் முகாம் நடத்திய பள்ளிக்கு நோட்டீஸ் ஏன்? பதிலளிக்க அரசுக்கு உத்தரவு
-
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சிக்கு முடிவு முதல் உலக கோப்பை பயிற்சி போட்டி வரை; இன்றைய முக்கிய நிகழ்வு (பிப்.,04)!
-
கர்நாடகா அமைச்சர் மீது ரூ.6 ஆயிரம் கோடி ஊழல் புகார்; சட்டசபையில் பாஜ எம்எல்ஏக்கள் விடிய விடிய போராட்டம்
-
அமெரிக்காவில் 500 பில்லியன் டாலர் முதலீடு செய்ய பிரதமர் மோடி உறுதி; வெள்ளை மாளிகை தகவல்
Advertisement
Advertisement