மாநில செஸ் போட்டி காஞ்சியில் 28 பேர் தேர்வு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடந்த மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் வெற்றி பெற்ற 28 மாணவ - மாணவியர், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்ட சதுரங்க கழகத்தின் சார்பில், மாவட்ட அளவிலான, பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியருக்கான செஸ் போட்டி காஞ்சிபுரம் குளோபல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஜன., 31, பிப்., 1 ஆகிய இரு நாட்களில், 7, 9, 11, 13, 15, 17, 25 வயதுடையோருக்கு என, தனித்தனி பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில்,195 மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
சதுரங்க கழக தலைவர் அப்துல் ஹமீது போட்டியை துவக்கி வைத்தார். காஞ்சி குளோபல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளரும், முதல்வருமான ஜூலியன் கெமிலஸ், பள்ளி நிர்வாக அலுவலர் சக்தி, காஞ்சிபுரம் மாவட்ட சதுரங்க கழகத்தின் செயலர் ஜோதி பிரகாசம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
அனைத்து பிரிவு போட்டிகளிலும் வெற்றி பெற்றவர் களுக்கு பரிசு மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கும் விழா நேற்று நடந்தது.
இப்போட்டியில் முதல் இரண்டு இடங்களை பிடித்த 28 மாணவ - மாணவியர் வரும், ஏப்., மே மாதங்களில், விழுப்புரம், சென்னை, நாமக்கல், காஞ்சிபுரம், துாத்துக்குடி, ஈரோடு, செங்கல்பட்டில் நடைபெற உள்ள மாநில அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்க உள்ளனர் என, சதுரங்க கழக செயலர் ஜோதிபிரகாசம் தெரிவித்தார்.
மேலும்
-
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்; அதிபர் டிரம்ப் தகவல்
-
லிபியா முன்னாள் அதிபரின் மகன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை
-
ஆர்எஸ்எஸ் முகாம் நடத்திய பள்ளிக்கு நோட்டீஸ் ஏன்? பதிலளிக்க அரசுக்கு உத்தரவு
-
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சிக்கு முடிவு முதல் உலக கோப்பை பயிற்சி போட்டி வரை; இன்றைய முக்கிய நிகழ்வு (பிப்.,04)!
-
கர்நாடகா அமைச்சர் மீது ரூ.6 ஆயிரம் கோடி ஊழல் புகார்; சட்டசபையில் பாஜ எம்எல்ஏக்கள் விடிய விடிய போராட்டம்
-
அமெரிக்காவில் 500 பில்லியன் டாலர் முதலீடு செய்ய பிரதமர் மோடி உறுதி; வெள்ளை மாளிகை தகவல்