நாங்கள் என்ன 'உண்டியல் குலுக்கி'களா?
@quote@எங்கள் கட்சிக்கு எங்கிருந்து நிதி வருகிறது என்பது ரகசியமல்ல. எந்த மக்களுக்காக பாடுபடுகிறோமோ, அந்த மக்கள் அள்ளிக்கொடுக்கும் பணம்.
தமிழக அரசு நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்படாத, பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத என உள்ள 64 கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். அன்னைக்கு தான் இத்தனை கட்சிகள் உள்ளது என்பதை தெரிந்து கொண்டேன்.
இந்த 64 கட்சிகளில் கம்யூனிஸ்ட்டுகளை தவிர வேறு எந்த கட்சியும் மக்களிடம் நிதி பெற்று தங்கள் அரசியல் நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. அவர்கள், யாருக்காக பாடுபடுகின்றனரோ, அவர்களிடம் இருந்து நிதி பெறுகின்றனர். இந்தியாவில் 10,000 கோடி ரூபாய்க்கு வைப்புத் தொகை வைத்துள்ள கட்சி பா.ஜ.,தான். இதை தேர்தல் ஆணையமே வெளியிட்டுள்ளது. எங்கிருந்து வந்தது இந்த 10,000 கோடி? இப்படிப்பட்ட கட்சியினர் தான், எங்களைப் பார்த்து உண்டியல் குலுக்கிகள் என கிண்டல் செய்கின்றனர்.
- சண்முகம், மாநில செயலர், மா.கம்யூ.,quote
தகரம் கண்டுபிடித்த பிறகு உண்டியல் தான் முதலில் செய்யப்பட்டது. அன்று குலுக்க ஆரம்பித்த கம்யூனிஸ்டு இன்று வரை குலுக்கி கொண்டிருக்கிறது. நாட்டை நாசமாக்கும் கொள்கைகளை உடையது அதனால்தான் கம்யூனிஸ்டு இருந்த நாட்டில் கூட காணாமல் போய்விட்டது - சீனா உள்பட.
தேர்தல் நிதி எங்கிருந்து வருகின்றது என்பது கூடவா கம்யூ கட்சிக்கு தெரியாதா? பல்வேறு கம்பெனிகள் தங்களது லாபத்தில் ஒரு சிறிய பகுதியை மனமுவந்து தாங்கட்கு விருப்பமான கட்சிக்கு சட்ட ரீதியாகவே தருகிறார்கள். மக்கள் பாஜக கட்சியை ஆதரிப்பதால் அதற்கு நிதி மற்ற கட்சிகளை விட அதிகமாக கிடைக்கிறது. கம்யூ கட்சி அழிந்தது சங்கங்களின் போராட்டங்களால்தான். நதி தர பயப்படுகின்றனர்.மேலும்
-
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்; அதிபர் டிரம்ப் தகவல்
-
லிபியா முன்னாள் அதிபரின் மகன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை
-
ஆர்எஸ்எஸ் முகாம் நடத்திய பள்ளிக்கு நோட்டீஸ் ஏன்? பதிலளிக்க அரசுக்கு உத்தரவு
-
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சிக்கு முடிவு முதல் உலக கோப்பை பயிற்சி போட்டி வரை; இன்றைய முக்கிய நிகழ்வு (பிப்.,04)!
-
கர்நாடகா அமைச்சர் மீது ரூ.6 ஆயிரம் கோடி ஊழல் புகார்; சட்டசபையில் பாஜ எம்எல்ஏக்கள் விடிய விடிய போராட்டம்
-
அமெரிக்காவில் 500 பில்லியன் டாலர் முதலீடு செய்ய பிரதமர் மோடி உறுதி; வெள்ளை மாளிகை தகவல்