மின்கம்பிகளில் உரசும் மரக்கிளைகள் மின் விபத்து அபாயத்தில் வேடல் மக்கள்

வேடல்: வேடல் கிராம பிரதான சாலையோரம் மின்கம்பிகளில் உரசும் மரக்கிளைகளால் மின்விபத்து அபாயம் ஏற்படும் நிலை உள்ளது.

காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, வேடல் கூட்டு சாலையில் இருந்து, கீழ்பேரமநல்லுார் செல்லும் பிரதான சாலையோரம் உள்ள விவசாய நிலங்களுக்கு மின் இணைப்பு வழங்க சாலையோரம் மின்தடை பாதைக்கான மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், மின்கம்பம் அருகில் உள்ள மரத்தின் கிளைகள் மின்கம்பியில் உரசும் வகையில் வளர்ந்துள்ளனன.

காற்றடிக்கும்போது, மின்கம்பிகளில் உரசும் மரக்கிளைகளால், தீப்பொறி ஏற்படுகிறது.

இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

மேலும், மின்கம்பி அறுந்து விழுந்தால், அதிகளவு உயிர்சேதம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, மின்கம்பியில் உரசும் மரத்தின் கிளைகளை அகற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement