விமர்சனம் செய்பவர்களையும் நண்பர்களாக பார்க்கிறோம்
@quote@தமிழக மக்களுக்கு மத்திய பட்ஜெட் பெரிய ஏமாற்றம் தந்துள்ளது. வரும் தேர்தலில் மக்கள் இதற்கு தக்க பாடம் கற்பிப்பர். வரும் சட்டசபைத் தேர்தலுக்காக, தி.மு.க., கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக, தி.மு.க.,வில் விரைவில் குழு அமைக்கப்படும். அக்குழு, கூட்டணியின் அனைத்து கட்சியினரிடமும் சுமூகமாகப் பேசி, தொகுதிகளையும், எண்ணிக்கையையும் இறுதி செய்வர். இதில் எந்த சலசலப்புகளும் இருக்காது. சுமூகமாக முடிந்ததும், எதிர் தரப்பினருக்கு ஏமாற்றமாக இருக்கும்.
தேர்தல் நெருங்குவதால், நிறைய பேர் கருத்துக் கணிப்புகளை எடுக்கின்றனர். அந்த கணிப்புகள், தி.மு.க.,வுக்கு சாதகமாக உள்ளன. மக்கள் எங்கள் பக்கம் இருப்பதால், யாரைப் பற்றியும் நாங்கள் கவலைப்படுவது இல்லை.
அரசியலில் எங்களுக்கு யாரும் எதிரிகள் அல்ல. எங்களை விமர்சிப்பவர்களைக்கூட, நாங்கள் நண்பர்களாகவே பார்க்கிறோம்; நேசிக்கிறோம்.
- ஸ்டாலின்,
தமிழக முதல்வர்quote
அதான் தெரியுமே ஒரு வார்த்தை ஒரே ஒரு வார்த்தை திராவிட மாடலை பற்றி விமர்சனம் செய்துவிட்டால், உடனே, போலீஸ் கேஸ், கைதுன்னு ஆரம்பிச்டுவாங்களே. இதுதான் உங்க அகராதியில் விமர்சனம் செய்பவர்களையும் நண்பர்களாக பார்க்கும் லட்சணம்.மேலும்
-
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்; அதிபர் டிரம்ப் தகவல்
-
லிபியா முன்னாள் அதிபரின் மகன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை
-
ஆர்எஸ்எஸ் முகாம் நடத்திய பள்ளிக்கு நோட்டீஸ் ஏன்? பதிலளிக்க அரசுக்கு உத்தரவு
-
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சிக்கு முடிவு முதல் உலக கோப்பை பயிற்சி போட்டி வரை; இன்றைய முக்கிய நிகழ்வு (பிப்.,04)!
-
கர்நாடகா அமைச்சர் மீது ரூ.6 ஆயிரம் கோடி ஊழல் புகார்; சட்டசபையில் பாஜ எம்எல்ஏக்கள் விடிய விடிய போராட்டம்
-
அமெரிக்காவில் 500 பில்லியன் டாலர் முதலீடு செய்ய பிரதமர் மோடி உறுதி; வெள்ளை மாளிகை தகவல்