காணிக்கை அன்னை சர்ச் தேர் திருவிழா விமரிசை

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் அ ருகே, செல்லம்பட்டி டை காணிக்கை அன்னை சர்சில், 251ம் ஆண்டு தேர் திருவிழா விமரிசையாக நடந்தது.

ஸ்ரீபெரு ம்புதுார் அருகே, செல்லம்பட்டிடை கிராமத்தில் புனித காணிக்கை அன்னை சர்ச் அமைந்துள்ளது. இக்கோவிலில், 251ம் ஆண்டு பெருவிழா நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்தது.

கூட்டு திருப்பலியை தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வாக தேர் பவனி நேற்று முன்தினம் இரவு நடந்தது.

இதில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Advertisement