அவையில் எம்பிக்கள் கேள்விக்கு அரசு பதில் சொல்ல வேண்டும்; முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

34

சென்னை: அவையில் பார்லிமென்ட் எம்பிக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு மத்திய அரசு பதில் அளிக்க தயாராக இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.



ராணுவ முன்னாள் தளபதி எழுதிய புத்தகம் குறித்து, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் நேற்று சபையில் மீண்டும் பேச முயன்றார். அவருக்கு ஆதரவாக காகிதங்களை கிழித்தெறிந்து காங்கிரஸ் எம்.பி.,க்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதால், தமிழக காங்கிரஸ் எம்.பி.,க்கள் உட்பட எட்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்து, முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் என் சகோதரர் ராகுல் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய பாஜ அரசு ஏன் அஞ்சுகிறது?
அவையில் பார்லிமென்ட் எம்பிக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு மத்திய அரசு பதில் அளிக்க தயாராக இருக்க வேண்டும் .

மேலும் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்கள் தொடர்பான விஷயங்களில் தெளிவுபடுத்த வேண்டும். 8 எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளில் பேசுவதற்கான அவர்களின் ஜனநாயக உரிமை மீட்டெடுக்கப்படுவதற்காக, அந்த சஸ்பெண்ட் உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement