இந்தியா - சீன உறவுகளில் புதிய உத்வேகம்; சீன தூதர் பெருமிதம்
புதுடில்லி: இந்தியா - சீன உறவுகளில் புதிய உத்வேகம் ஏற்பட்டுள்ளதாக இந்தியாவுக்கான சீன தூதர் ஷூ பெய்ஹாங் தெரிவித்துள்ளார்.
சீனப் புத்தாண்டு மற்றும் வசந்த கால விழாக் கொண்டாட்டம் புதுடில்லியில் உள்ள சீன தூதரக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், இந்திய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது, இந்தியா - சீன உறவுகளில் புதிய உத்வேகம் ஏற்பட்டுள்ளதாக இந்தியாவுக்கான சீன தூதர் ஷூ பெய்ஹாங் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் பேசியதாவது; யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற புத்த மத சிற்பங்கள் மற்றும் கட்டடக்கலைகள், சீனா மற்றும் இந்தியாவிற்கு இடையே வரலாற்று ரீதியாக நிலவிய கலாச்சாரப் பரிமாற்றங்களை பறைசாற்றுகின்றன. நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூரின் இருப்பிடமான சாந்திநிகேதன் மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள விஸ்வபாரதி பல்கலையில் சீன மொழி மற்றும் கலாச்சாரத் துறைக்கு அண்மையில் நேரில் சென்றிருந்தேன். அப்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால கலாச்சாரப் பிணைப்புகள் மற்றும் ஆன்மீகத் தொடர்புகள் பற்றிய தனது உணர்வை அதிகரித்தது.
2025ம் ஆண்டில் இந்தியா - சீனா இடையிலான இருதரப்பு வர்த்தகம் முன்னெப்போதும் இல்லாத வகையில், ரூ.12.9 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 12% அதிகமாகும். சீனாவிற்கான இந்திய ஏற்றுமதி 9.7% வளர்ச்சியடைந்துள்ளது.
இந்தியப் பக்தர்களுக்காக திபெத் தன்னாட்சிப் பகுதியில் உள்ள கைலாச மானசரோவர் யாத்திரையை சீனா மீண்டும் தொடங்கியுள்ளது. சீனர்களுக்கு இந்தியா மீண்டும் சுற்றுலா விசா வழங்கத் தொடங்கியுள்ளது. மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
கடந்தாண்டு நடந்த பிரதமர் மோடி மற்றும் அதிபர் ஷி ஜின்பிங் இடையிலான சந்திப்பு வெற்றிகரமாக அமைந்தது. இதன் விளைவாக, பல்வேறு நிலைகளில் இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் அதிகரித்து, உறவுகள் தொடர்ந்து முன்னேறி வருகிறது, இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
சர்வதேச குத்துச்சண்டை: இந்தியா ஆதிக்கம்
-
பயமுறுத்தும் பனிப்பொழிவு: இந்திய வீரர்களுக்கு தோனி எச்சரிக்கை
-
வங்கதேசத்தினர் ஊடுருவல்: திருப்பூரில் 13 பேர் கைது
-
தங்கம் வென்றார் ஈஷா சிங்: ஆசிய துப்பாக்கி சுடுதலில்
-
நேபாளம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய சர்ச்சைக்குரிய மசோதா வாபஸ்; அரசு அறிவிப்பு
-
ஐசிசி., யு-19 உலகக்கோப்பை: இறுதி போட்டியில் இந்தியா