ஆபத்தான அங்கன்வாடி மையம்
மேலுார்: கொட்டகுடி அங்கன்வாடி மைய கட்டட சுவரில் தண்ணீர் கசிவதால் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.
பெருமாள் குளம் அருகே 16 ஆண்டுகளாக செயல்படும் இம்மையத்தை சுற்றி தண்ணீர் தேங்கியும், புதர் மண்டியும் காணப்படுகிறது. சமைக்க, பருக தெருக்குழாய் நீரை பயன்படுத்துகின்றனர்.
பெற்றோர் கூறியதாவது: சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டு தண்ணீர் கசிவதால் எப்ப விழுமோ என்ற பயம் ஏற்பட்டுள்ளது. மையம் அருகே குப்பை கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. ரோட்டில் கழிவு நீரை கடந்து மையத்திற்கு குழந்தைகள் செல்வதால் தொற்றுநோய் அபாயம் நிலவுகிறது. ஜன்னலை திறந்தாலே புதர் மண்டிய பகுதியிலிருந்து விஷ பூச்சிகள் வருவதால் ஜன்னலை அடைத்தே வைத்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் கட்டடத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்து வலுவிழந்து இருந்தால் புதிய மையம் கட்ட வேண்டும் என்றனர்.
ஊராட்சி செயலாளர் கணேசன் கூறுகையில், மையத்தை சுற்றி தேங்கி கிடக்கும் தண்ணீரை வெளியேற்றிவிட்டோம். உடனடியாக புதர் அகற்றப்படும். உயரதிகாரிகளுடன் கலந்து பேசி மராமத்து பார்க்கப்படும் என்றார்.
மேலும்
-
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்; அதிபர் டிரம்ப் தகவல்
-
லிபியா முன்னாள் அதிபரின் மகன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை
-
ஆர்எஸ்எஸ் முகாம் நடத்திய பள்ளிக்கு நோட்டீஸ் ஏன்? பதிலளிக்க அரசுக்கு உத்தரவு
-
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சிக்கு முடிவு முதல் உலக கோப்பை பயிற்சி போட்டி வரை; இன்றைய முக்கிய நிகழ்வு (பிப்.,04)!
-
கர்நாடகா அமைச்சர் மீது ரூ.6 ஆயிரம் கோடி ஊழல் புகார்; சட்டசபையில் பாஜ எம்எல்ஏக்கள் விடிய விடிய போராட்டம்
-
அமெரிக்காவில் 500 பில்லியன் டாலர் முதலீடு செய்ய பிரதமர் மோடி உறுதி; வெள்ளை மாளிகை தகவல்