நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து: மேகாலயாவில் தொழிலாளர்கள் 18 பேர் பலி
ஷில்லாங்: மேகாலயா நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி தொழிலாளர்கள் 18 பேர் பலியாகினர்.
மேகாலயா மாநிலம் கிழக்கு ஜெயந்தியா மலைப்பகுதியில் தஷ்காய் என்னுமிடத்தில் நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வந்தது. இங்கு தொழிலாளர்கள் இன்று வேலை செய்துகொண்டிருந்தபோது திடீரென வெடிச்சத்தம் கேட்டது. இடிபாடுகளில் சிக்கி தொழிலாளர்களில் 18 பேர் பலியாகினர்.
பேரிடம் மீட்புப் படையினர், போலீஸ் அதிகாரிகள் அங்கு விரைந்தனர். தற்போது அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. சுரங்கம் தோண்டுவதற்காக வைத்திருந்த வெடிபொருட்கள் வெடித்ததில் விபத்து ஏற்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தடையை மீறி, இந்தச் சுரங்கம் சட்டவிரோதமாக இயங்கியதும், விசாரணையில் அம்பலம் ஆகியுள்ளது.
இந்த விபத்தில் பலியானவர்களில் பெரும்பாலானோர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள். சம்பவ இடத்தை போலீஸ் அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரதமர் இரங்கல்
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும்,காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் பிரதமர் தேசிய நிவாரணநிதியில் இருந்த வழங்க உத்தரவிட்டு உள்ளார்.
மேலும்
-
பிரதமர் மோடி தமிழகம் வருகை மார்ச் 1ம் தேதிக்கு மாற்றம்
-
எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளி; 5வது நாளாக முடங்கியது லோக்சபா
-
மஹா.,வில் என்கவுன்டர்: நக்சலைட்டுகள் 3 பேர் சுட்டுக்கொலை
-
கல்வியாளர் ரூபிள் நகிக்கு சர்வதேச ஆசிரியர் விருது!
-
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை; 5.25 சதவீதமாக நீடிக்கும் என அறிவிப்பு
-
விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்தது செல்லும்: ஐகோர்ட்