மஹா.,வில் என்கவுன்டர்: நக்சலைட்டுகள் 3 பேர் சுட்டுக்கொலை

2

மும்பை: மஹாராஷ்டிராவின் கட்சிரோலியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில், நக்சலைட்டுகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.


நாட்டில் நக்சல் பயங்கரவாதத்தை ஒழிக்க இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதியை மத்திய அரசு காலக்கெடுவாக நிர்ணயித்துள்ளது. இதனால் நக்சல் ஒழிப்பு நடவடிக்கை வேகமெடுத்து உள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தின் கட்சிரோலி வனப்பகுதியில் நக்சலைட்டுகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்தது.


அங்கு சென்ற படையினரை கண்டதும் உஷாரான நக்சல் குழுவினர், துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில், நக்சல் அமைப்பை சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சம்பவ இடத்திலிருந்து ஆயுங்கள் மீட்கப்பட்டுள்ளன.

அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இந்த நடவடிக்கையின் போது பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு விமானத்தில் அழைத்து செல்லப்பட்டனர்.


ரூ.25 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட நக்சல்



மஹாராஷ்டிரா-சத்தீஸ்கர் எல்லையில் உள்ள அபுஜ்மத் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் நக்சல் தடுப்பு வேட்டையில் இறங்கினர். இந்த தேடுதல் வேட்டையின் போது அங்கு மறைந்திருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர்.இதை தொடர்ந்து பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். பலமணி நேரம் நீடித்த இந்த சண்டையில், 3 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். அவர்களில் இருவர் பெண்கள் ஆவர். மற்றொருவர் ஆண் ஆவர். அவரின் பெயர் பிரபாகர் ஆகும். இவரை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு ரூ.25 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.கொல்லப்பட்ட நக்சலைட்டுகளிடம் இருந்து ஒரு ஏகே 47 ரக துப்பாக்கி, எஸ்எல்ஆர் வகை துப்பாக்கி உள்ளிட்ட பல ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன.
,தாக்குதலின் போது ராணுவ வீரர்கள் இருவர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் பாம்ரகட் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், பலனின்றி ராணுவ வீரர் தீபக் சின்னமாதவி(38) என்பவர் வீர மரணம் அடைந்தார். மற்றொரு வீரரான ஜோகா மாதவி என்பவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார். இருப்பினும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேல் சிகிச்சைக்காக அவர் கட்சிரோலிக்கு விரைவில் கொண்டு செல்லப்படுவார் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். அபுஜ்மத் பகுதியானது, அடர்ந்த காடுகள் அடங்கிய பகுதி என்பதால் அங்கு மேலும் பல நக்சலைட்டுகள் பதுங்கி இருக்கலாம் என்ற அடிப்படையில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையை மீண்டும் தொடங்கி உள்ளனர்.

Advertisement