எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளி; 5வது நாளாக முடங்கியது லோக்சபா
நமது டில்லி நிருபர்
லோக்சபா இன்று (பிப்.,06) காலை 11 மணிக்கு கூடியதும், எம்பிக்கள் சஸ்பெண்ட் விவகாரம், எதிர்க்கட்சி தலைவருக்கு அவையில் பேச மறுப்பு உள்ளிட்ட விவகாரங்களை வலியுறுத்தி, எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் 5வது நாளாக சபை முடங்கியது.
ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன், பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 28ல் துவங்கியது. கடந்த 1ல், 2026 - 27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில், மத்திய அமைச்சர்கள், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி எம்.பி.,க்கள் பேசினர்.
பிரதமர் மோடியை உரையாற்ற விடாமல் எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் முட்டுக்கட்டை போட்டனர். இதனால் பிரதமர் மோடியின் உரையின்றி ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், வழக்கம் போல லோக்சபா இன்று (பிப்.,06) காலை கூடியது.
8 எம்பிக்கள் சஸ்பெண்ட் விவகாரம், எதிர்க்கட்சி தலைவருக்கு அவையில் பேச மறுப்பு, இந்தியா- அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியால் ஈடுபட்டனர். பதாகைகளை ஏந்தி அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கமிட்டனர். இதனால் அவையில் கூச்சல், குழப்பம் நீடித்தது.
சபாநாயகர் ஓம்பிர்லா பலமுறை எச்சரித்தும் எம்பிக்கள் கே ட்கவில்லை. அமளி தொடர்ந்ததால், வரும் பிப்ரவரி 9ம் தேதி காலை 11 மணி வரை லோக்சபாவை சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்திவைத்தார்.
@block_P@
எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வருவதற்கு சபாநாயகர் ஓம்பிர்லா கண்டனம் தெரிவித்தார். அவர், ''19 மணி நேரம் மற்றும் 13 நிமிடங்கள் லோக்சபாவின் நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது. 140 கோடி மக்கள் அவை நடவடிக்கையை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்ய மக்கள் உங்களை லோக்சபாவுக்கு அனுப்பவில்லை. அவை நேரம் வீணாவதால் பல உறுப்பினர்களுக்கு பேசும் வாய்ப்புகள் பாழாகின்றன'' என தெரிவித்தார்.block_P
அதேநேரத்தில் காலை 11 மணிக்கு ராஜ்யசபா கூடியது. அங்கு அலுவல் நடந்தது. பின்னர் எம்பிக்கள் அமளி காரணமாக மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
காங்கிரஸ் ஏம்பிக்கலை எல்லாரையும் அவயை விட்டு அனுப்பி சஸ்பெண்ட் பண்ண வேண்டும்
அமெரிக்க வர்த்தக ஒப்பந்தந்தில் என்னென்ன விதிமுறைகளின் பேரில் ஒப்பந்தம் கையெழுத்தானது என்கிற விவரங்களை வெளிப்படையாக வெளியிடுவதில் அரசுக்கு எது தடுக்கிறது என்று தெரியவில்லை இது ராணுவ ரகசியம் கிடையாது நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் ஏனென்றால் இதனால் பாதிக்கப்படப்போவது நாட்டில் உள்ள விவசாயிகளும் மக்களும்தான் மக்கள் இதுகுறித்து அறிய முழு உரிமை உள்ளது இதைவெளியிட மாட்டேன் என்று மறைப்பதில் ஏதோ வழக்கமான திருட்டுத்தனம் உள்ளதாக தெரிகிறது மடியில் பயமில்லை என்றால் எதற்காக ஒப்பந்தத்தை வெளியிட தயக்கம்? மேலும் சீனா ஆக்கிரமிப்பு உண்மை இல்லை என்றால் தைரியமாக செயற்கைகோள் படத்தை வெளியிட்டு நம் நாட்டு எல்லை இதுதான் சீனா எதையும் ஆக்கிரமிக்கவில்லை என்று செயற்கைக்கோள் படத்தை வெளியிட்டு தெளிவுபடுத்தலாமே எந்த விசயத்திலும் இந்த எழவெடுத்த கேடிகள் வெளிப்படைத்தன்மையோ சட்டத்தை நடைமுறை படுத்தும் முன் நாடாளுமன்றத்தில் விவாதமோ நடத்துவதே கிடையாது இதைத்தான் சர்வாதிகாரி கொடூர கொலைகாரன் ஹிட்லர் செய்தான், அழிந்தான் நான் எந்த கட்சியையும் சாராதவன் இதையே காங்கிரஸ் செய்தாலும் தப்புதான் ஜனநாயக நாட்டில் அரசு வெளிப்படைத்தன்மையுடனும் நேர்மையுடனும் சேயல்படுவது அவசியம் இந்த அரசு அப்படி செயல்படுவதாக தெரியவில்லை
ராகுவிடம் நாட்டை கொடுத்தால் விற்று விட்டு பணத்தில் தாய்லாந்து டூர் போயிருப்பார்.
இதற்க்கு காரணம் ஒரு பெண்மணி , அவர் யாரென்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்
இதுதான் இந்திய நாட்டின் அரசியல் கலாச்சாரம். ஒருவேளை நாளையே பாஜக எதிர்க் கட்சியாக போய் விட்டால் அவர்களும் இப்படித்தான் இன்னும் மோசமாகவும் நடந்துக் கொள்வார்கள். அன்றும் இன்றும் இனியென்றும் இந்திய அரசியல் இப்படித்தான் இருக்கும் இதை இன்றும் மக்கள் ரசித்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள்.
பழைய பாராளுமன்றத்துக்குள் போய் சொறிந்துவிட்டு வரலாமே.
பிரதமருக்கே பாதுகாப்பு இல்லை நாட்டை எப்புடி காப்பாற்றுவார்
தேச விரோத சக்திகள் ஆட்டம் போடுகிறது. இது ஒரு சதி செயலாகவே தெரிகிறது.
மிசா கொண்டுவந்து சுளுக்கெடுத்தா சரியாகும்
சபாநாயகர் ஏன் இவ்வளவு பொருமை காட்ட வேண்டுமோ? ஒரு மாநிலத்தில் உறுள்பினர் சும்மா எழுந்து நின்று உறக்க பேசினாலே ....மேலும்
-
இஸ்லாமாபாதில் வழிபாட்டுத்தலத்தில் குண்டுவெடிப்பு; 25 பேர் உடல்சிதறி பலி
-
ஓட்டுக்கு ரூ.2 ஆயிரம்; ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.20 கோடி அனுப்பியது திமுக; நயினார் நாகேந்திரன் திடுக்
-
டிஜிட்டல் மோசடியில் பணத்தை இழப்பவர்களுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு: ரிசர்வ் வங்கி பரிசீலனை
-
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத திமுக ஆட்சி; நயினார் நாகேந்திரன்
-
மணிப்பூரில் மீண்டும் வெடித்தது வன்முறை; புதிய ஆட்சி மாற்றத்திற்கு பிறகும் பதற்றம்
-
கூட்டணியில் காங்கிரசை இழிவாக பேசும்முறை தொடர்வது நல்லதல்ல; மீண்டும் கொளுத்தி போட்ட மாணிக்கம் தாகூர்