கல்வியாளர் ரூபிள் நகிக்கு சர்வதேச ஆசிரியர் விருது!
துபாய்: ஏழை, எளிய மக்களுக்காக நூற்றுக்கணக்கான கல்வி பயிற்று மையங்களை உருவாக்கியதற்காகவும், குடிசை பகுதிகளில் சுவர் ஓவியங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காகவும், இந்தியாவை சேர்ந்த கல்வியாளர் ரூபிள் நகிக்கு சர்வதேச ஆசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஆசிரியரும், சமூக ஆர்வலருமான ரூபிள் நகி, மும்பையில் ஒரு ஓவிய பயிற்சி மையத்தை நடத்தி வந்தார். ஏழை, எளிய மக்களுக்கும் கல்வி சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், ரூபிள் நகி கலை அறக்கட்டளையின் மூலம் கல்வி பயிற்று மையங்களை ஆரம்பித்தார்.
பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளுக்கு கல்வி வழங்கவும், ஏற்கனவே பள்ளியில் இருக்கும் குழந்தைகளுக்குக் கூடுதல் பயிற்சி அளிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளார். தற்போது, இவர் நாடு முழுதும் 800க்கும் மேற்பட்ட பயிற்று மையங்களை நடத்தி வருகிறார்.
அதுமட்டுமில்லாமல், குடிசைப் பகுதிகளை மேம்படுத்தும் நோக்கில் 'மிசால் மும்பை' என்ற திட்டத்தையும் முன்னெடுத்து வருகிறார். இதன்மூலம், குடிசைப் பகுதிகளில் உள்ள சுவர்களில், கல்வியறிவு, அறிவியல், கணிதம் மற்றும் வரலாறு போன்ற கல்வி சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் சுவர் ஓவியங்களை வரைந்து வருகிறார்.
மும்பையில் மட்டும் ஒன்றரை லட்சம் வீடுகளை இவ்வாறு சுவர் ஓவியம் மூலம் புதுப்பித்துக் கொடுத்துள்ளார். தற்போது நாடு முழுதும் 160க்கும் மேற்பட்ட குடிசைப் பகுதிகளிலும், கிராமங்களிலும் பணியாற்றி வருகிறார்.
கல்வித்துறையில் ரூபிள் நகி வழங்கி வரும் மாபெரும் பங்களிப்பை பாராட்டி, சுமார் 9 கோடி ரூபாய் மதிப்புமிக்க சர்வதேச ஆசிரியர் விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. துபாயில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற உச்சி மாநாட்டில், பட்டத்து இளவரசர் ஷேக் ரஷீத் அல் மக்துாமிடம் இருந்து அவர் இந்த விருதை பெற்றுக்கொண்டார்.
விருது பெற்றது குறித்து ரூபிள் நகி கூறியதாவது;
இந்த விருது எனக்கும், இந்தியாவுக்கும் கிடைத்த பெருமை. 24 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறிய மையத்தில் 30 குழந்தைகளுடன் எனது பயணத்தைத் தொடங்கினேன். இன்று 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளைச் சென்றடைந்துள்ளேன். ஒவ்வொரு குழந்தையையும் பள்ளிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற எனது கனவை நிறைவேற்றுவது ஒரு நெகிழ்ச்சியான அனுபவம், என்று கூறினார்.
மேலும், தனக்குக் கிடைத்த 8.3 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுத் தொகையின் மூலம், இலவச தொழிற்பயிற்சி வழங்கும் நிறுவனத்தை உருவாக்கப்போவதாக அறிவித்துள்ளார். வர்க்கி அறக்கட்டளை மூலம் கடந்த 2015ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருதைப் பெறும் 10வது ஆசிரியர் ரூபிள் நகி என்பது குறிப்பிடத்தக்கது.
இனிய வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன் ...
Hearty congratulations
எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி. மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். கல்விதான் ஒன்றுதான் மக்கள் வாழ்க்கையில் விரும்பத்தக்க மாற்றங்களைக் கொண்டு வரும். தமிழ்கத்தில் நவோதயா பள்ளிகளை வர விடாமல் தடுப்பதன் மூலம் அரசே நல்ல கல்விக்கு எதிராக செயல்படுகிறது.
மனமார்ந்த வாழ்த்துகள்மேலும்
-
பத்மஸ்ரீ விருது பெற்றவருக்கு கவர்னர் கடிதம்
-
கூட்டணியை விட கொள்கையே முக்கியம்: சொல்கிறார் கமல்
-
ஆர்ஏசி டிக்கெட் ஒதுக்கப்பட்டால் பயணிகளுக்கு பாதி கட்டணம்; பார்லி. குழு பரிந்துரை
-
யு19 உலக கோப்பை கிரிக்கெட் பைனலில் வைபவ் சூர்யவன்ஷி அதிரடி சதம்: இந்திய அணி 411 ரன் குவிப்பு
-
விவசாயி வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ.15,000 லஞ்சம்; அதிகாரி கைது
-
ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேர் இடமாற்றம்