'மக்களுக்காக மக்களிடமிருந்து' பா.ஜ., கருத்து கேட்பு படிவம்

கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்ட, பா.ஜ., சார்பில் 'மக்களுக்-காக மக்களிடமிருந்து' 2026 சட்டசபை தேர்தல் அறிக்கை மக்களிடம் கருத்து கேட்பு இயக்கம் சார்பில், கருத்து கேட்பு படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தலைவர் கவியரசு தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்-பினர் சிவப்பிரகாசம், கருத்து சேகரிப்பின் மாவட்ட பொறுப்பாளராக செயல்பட்டார். பா.ஜ., கிழக்கு மாவட்டத்தில் உள்ள, 3 சட்டசபை தொகு-திகளிலும், தேர்தல் அறிக்கை தொடர்பாக, மக்க-ளிடமிருந்து கருத்து கேட்கும் வாகன பிரசார இயக்கம் துவக்கி வைக்கப்பட்டது. வாகனத்தை முன்னாள் எம்.பி., நரசிம்மன் கொடியசைத்து துவக்கி வைத்தார். நகர தலைவர் விமலா உள்-ளிட்ட நிர்வாகிகள், கருத்து கேட்பு படிவத்தை பொதுமக்களிடம் வழங்கினர்.


மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட மகளிரணி தலைவர் சிலம்பு ஒலி, ராணுவ பிரிவு மாநில செயலாளர் கோவிந்தராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் வசந்தகோகிலா உள்ளிட்ட பலர் கலந்து
கொண்டனர்.

Advertisement