அமெரிக்காவுடனான ஒப்பந்தம் இந்திய விவசாயிகளுக்கு பெரிதும் உதவும்; பியுஷ் கோயல்
புதுடில்லி: இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் நமது விவசாயிகளுக்கு பெரிதும் உதவும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்,
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; அமெரிக்கச் சந்தைகள் இந்திய விவசாயிகளுக்கு மிகப்பெரிய மதிப்பையும், கூடுதல் வருமானத்தையும் வழங்கும். ஏற்கனவே 55 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வேளாண் மற்றும் மீன் பொருட்களை ஏற்றுமதி செய்யும் இந்திய விவசாயிகளுக்கு இந்த ஒப்பந்தம் பெரிதும் உதவும்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகின் இறக்குமதி 2 டிரில்லியன் டாலராக உயரும் என்பதால், அமெரிக்கப் பொருட்களுக்கான தேவையும் அதிகரிக்கும். மத்திய அரசின் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் சாத்தியமாகியுள்ளது. வர்த்தகத்துறையில் அனுபவம் வாய்ந்த பேச்சுவார்த்தைக் குழுவினர் இடம்பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
பாக்கலாம்மேலும்
-
பட்ஜெட்டில் ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு 8.5 மடங்கு அதிகரித்துவிட்டது; ஸ்டாலினுக்கு மத்திய அரசு பதில்
-
புதுச்சேரியில் ஆதியோகி ரத யாத்திரை
-
தூய்மைப் பணியாளர்களுக்குத் துணையாக இருப்போம்; முதல்வர் ஸ்டாலின்
-
அடுத்த 10 ஆண்டுக்குள் நிலவில் நகரம்; எலான் மஸ்க் நம்பிக்கை
-
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர்: எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியால் லோக்சபா ஒத்திவைப்பு
-
டில்லியில் பார்லிமென்ட், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் விசாரணை