திட்டமிட்ட சதி? டிஎன்பிஎஸ்சி தேர்வு ரத்து குறித்து திமுக அரசு மீது நயினாருக்கு சந்தேகம்
சென்னை: தமிழகத்தில் இன்று நடக்கவிருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வை ரத்து செய்தது திமுக அரசின் திட்டமிட்ட சதியா? என்று பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை; தேர்வு மையங்கள் ஒதுக்குவதில் அரசு செய்த குளறுபடிகளின் காரணமாக இன்று தமிழகம் முழுவதும் நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் நம்மை கொதிப்படையச் செய்கின்றன. ஆளும் அரசின் நிர்வாகத் தோல்விக்கு நமது இளைஞர்களின் பலமாத உழைப்பு வீணாவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
அரியணை ஏறியதும் 5 லட்சம் இளைஞர்களுக்கு அரசுப் பணிகளை வழங்குவோம் எனப் போலி வாக்குறுதி அளித்த திமுகவின் ஆட்சியில் அரசுப் பணியாளர்களுக்கான தேர்வுகள் முறையாக நடத்தப்படுவதில்லை என்பதையும், கமிஷன் அடிப்படையில் தான் அரசுப் பதவிகள் வழங்கப்படுகின்றன என்பதையும் நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்நிலையில் வெறும் 9 ஆயிரம் தேர்வாளர்கள் பங்குபெறும் குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளில் இத்தனை குளறுபடிகள் நடப்பது பலவித சந்தேகங்களை எழுப்புகிறது.
உண்மையிலேயே அரசுத் தேர்வுகளில் இம்மாதிரியான குழப்பங்கள் எதேச்சையாக நடைபெற்றனவா? அல்லது தேர்வை ரத்து செய்ய வேண்டுமென்ற அரசின் திட்டமிட்ட சதியா? என்பதை ஆதாரங்களுடன் பொதுமக்களிடம் விளக்க வேண்டியது முதல்வர் ஸ்டாலினின் தார்மீகப் பொறுப்பு, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
நைனார் ஜி நேத்து நடந்த மத்திய அரசு பணிக்கான எம்டிஎஸ் எக்ஸாம் பேப்பர் லீக் டெலெக்ராம்ல ....அதுக்கு என்ன சொல்ல போறீங்க ....ஒரு தேர்வு கூட நடத்த தெரியாத கையாலாகாத பாஜக அரசு னு சொல்லுங்க பாப்போம் ....
சென்னையில் பிரச்சனை என்றவுடன் ஆள் ஆளுக்கு பேட்டி குடுக்கறாங்க?
Are they Planing to receive money and appoint persons through back door as before under DMK Model.மேலும்
-
அதிக ஒலியுடன் இயக்கப்படும் 'டூவீலர்'களால்... காது கிழியுது... வாகனங்களை கைப்பற்றி அபராதம் விதிக்க வலியுறுத்தல்
-
இன்சூரன்ஸ்: ஒரு சிகிச்சைக்கு இரு பாலிசிகளில் கிளெய்ம் பெற முடியுமா?
-
ஜெ., சசி சொத்துக்குவிப்பு வழக்கு; தீர்ப்புக்கு முன் திக்...திக்... நிமிடங்கள்
-
மாநாடு சென்ற ஐ.ஜே.கே.வினர் வழியனுப்பிய அ.தி.மு.க.வினர்
-
துாய்மைப்பணியாளர் பேரன் சிகிச்சைக்கு மேயர் உதவி
-
ரிப்போர்ட்டர் லீக்ஸ்