காங்., எம்பி மனைவியின் பாக்., தொடர்பு குறித்து உயர்மட்ட விசாரணை: அசாம் முதல்வர் வலியுறுத்தல்
கவுகாத்தி: அசாம் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி தருண் கோகோயின் மனைவியின் பாகிஸ்தான் தொடர்பு குறித்து மத்திய புலனாய்வு பிரிவு விசாரணை நடத்த வேண்டும் என அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.
லோக்சபா காங்கிரஸ் துணைத்தலவராக இருப்பவர் கவுரவ் கோகாய். இவரது மனைவி எலிசபெத். பிரிட்டனைச் சேர்ந்தவர். இவருக்கும், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா மற்றும் பாஜவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இது குறித்து அம்மாநில அரசு சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்தியது. இக்குழு விசாரணை நடத்தி மாநில அரசிடம் அறிக்கை சமர்ப்பித்து உள்ளது.
இதனைத் தொடர்ந்து முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா நிருபர்களிடம் கூறியதாவது: அசாமைச் சேர்ந்தவருக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு உள்ளது. இதனை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது எனது கடமை. நான் சிங்கப்பூர் சென்ற போது, நமது எம்பி , இளைஞர் ஒருவருடன் பாகிஸ்தான் தூதரகம் சென்ற புகைப்படத்தை பார்த்தேன். பாகிஸ்தானைச் சேர்ந்த எந்த எம்பியும் , கோகோய் போன்று பாகிஸ்தான் சென்றது இல்லை.
காங்கிரசில் உள்ளவர்கள் கூட இந்த புகைப்படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளனர். இதனால், நாங்கள் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த துவங்கினோம். இதில், பாகிஸ்தான் தூதர் பஷீத் அசாம் சென்றது தெரிவந்துள்ளது. மேலும் கவுரவ் கோகோய் மனைவி எலிசபெத், பாகிஸ்தானில் 2011 முதல் 2012ம் ஆண்டு வரை பணியாற்றியதும் கண்டுபிடித்துள்ளோம். பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களுடன் கோகோய் தொடர்பில் இருந்துள்ளார். இதற்கு முன்னர் எந்த காங்கிரஸ் தலைவர்களும் அப்படி இருந்தது கிடையாது.
கோகாய் தந்தை தருண் கோகோய் முதல்வராக இருந்த போது, கவுரவ் பாகிஸ்தான் சென்றுள்ளார். இந்த பயணம் மிகவும் முக்கியமானது. அசாம் போலீஸ், சிறப்பு பிரிவு அல்லது மத்திய அரசுக்கு தெரியாமல், பாதுகாப்பு விதிமுறைகளை மீறி அவர் சென்றுள்ளார். எலிசபெத், மீது நிதி மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளதை சிறப்பு புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். பாகிஸ்தானின் ஏஜென்ட் ஆன அலி தாகீர் ஷேக் மேற்பார்வையின் கீழ் அந்நாட்டில் பணியாற்றி உள்ளார். இது குறித்து மத்திய உள்றை அமைச்கம், மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் உயர் மட்ட விசாரணை நடத்த வேண்டும் என மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
சிறப்பு புலனாய்வு அறிக்கையில், '' கவுரவ் கோகோயின் மனைவி பாகிஸ்தானில் வேலையில் சேர்வதற்கு முன்னர் அந்நாட்டிற்கு பல முறை சென்று வந்துள்ளார். பாகிஸ்தானில் உள்ள வங்கிக்கணக்கு குறித்த விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை. இந்தியா குறித்த ரகசிய அறிக்கைகளை அவர் பாகிஸ்தானிடம் பகிர்ந்துள்ளார். மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநில அரசுகளுக்கு இடையே உள்ள பதற்றம் குறித்து அவர் தகவல்களை பரிமாறி உள்ளார்.
கவுரவ் கோகாய் மறுப்பு
இது தொடர்பாக கவுரவ் கோகோய் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நான் டில்லி முதல் அசாம் வரை பத்திரிகையாளர் ஆக பணியாற்றி உள்ளேன். இந்த நூற்றாண்டின் படுதோல்வியடைந்த பத்திரிகையாளர் சந்திப்பாகி உள்ளது. ' சி' கிரேட் சினிமாவை விட மோசமானதாக இருக்கிறது. அரசியல் சாணக்கியர் என போற்றப்படும் முதல்வர் முன்வைத்த கருத்துகள் அனைத்தும் போலியானவை.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Assam CM has been pointing this issue for quite sometime now. This is a serious matter concerning an Khangress MP of Parliament and should be acted upon on a priority basis please. A TMC lady MP was thrown out of Parliament on similar grounds.
People from other countries who have come here as Bahu would never be loyal to this country.
பாகிஸ்தானில் உன் மனைவி வேலை செய்தது பொய்யா இல்லை சென்று வந்ததும் பொய்யா நீ சொல்வது மட்டுமே பொய்.
பா ஜ காவில் பிரதமர் பதவிக்கு தகுதியான இன்னுமொரு தலைவர் உருவாகிறார் , அஸ்ஸாமில் இருந்து வாழ்த்துக்கள்
உண்மையை சொன்னால் நீங்கள் இப்படித்தான் எழுத்துவீர்கள்
அந்த மனுஷன் காங்கிரெஸ்ஸில் இருந்து வந்தவன்மேலும்
-
வரும் 12 வரை வெப்பநிலை 2 டிகிரி செல்ஷியஸ் அதிகரிக்கும்
-
8 மாவட்டங்களில் 42 இடங்களில் காட்டுத்தீ
-
கூட்டுறவு விற்பனை சங்க ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
-
குடிநீர் தட்டுப்பாடு அபாயம்: நீர் மேலாண்மைக்கு உத்தரவு
-
மே 3ல் இளநிலை 'நீட்' தேர்வு; மார்ச் 8 வரை விண்ணப்பிக்கலாம்
-
சனிக்கிழமை பத்திரப்பதிவுக்கு ரூ.1,000 சிறப்பு கட்டணம் ரத்தாகுமா?