பலுான் வியாபாரி பலி

கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அடுத்த ஜிங்கலுார், எலியாஸ் நகரை சேர்ந்தவர் ஷேக்-பைரோ, 48, பலுான் வியாபாரி.

இவர், திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வசித்து வந்தார். கடந்த, 5ம் தேதி இரவு வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது, திடீரென வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். சில மணி நேரம் கழித்து தெளிவடைந்து அவர் எழுந்தபோது, அவரது உடம்பில் தீப்பிடித்து இருப்பது தெரிந்தது. அதை அணைத்த அவர், இது பற்றி தன் தம்பி இம்தியா-சுக்கு தகவல் தெரிவித்தார். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். குருபரப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement