பொக்லைன் மீது பைக் மோதல் தனியார் நிறுவன ஊழியர் பலி

கிருஷ்ணகிரி; திருப்பத்துார் மாவட்டம், நரவந்தம்பட்டியை சேர்ந்தவர் பிரபாகர், 48, தனியார் நிறுவன ஊழியர். கடந்த, 5ல் ஹீரோ பேஷன் பைக்கில் சென்றுள்ளார்.

இரவு, 7:45 மணிளவில், பந்தாரப்-பள்ளி அருகே ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது முன்னாள் சென்ற பொக்லைன் வாகனம் திடீரென நின்றது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பைக், பொக்-லைனில் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாய-மடைந்த பிரபாகர் பலியானார். குருபரப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement