விவசாய நிலத்தில் மர்ம பொருள் வெடித்து விவசாயி காயம்
தேன்கனிக்கோட்டை; கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே கெண்டிகானப்பள்ளி கிராமத்தை சேர்ந்-தவர் பிரகாஷ், 50, விவசாயி. கடந்த, 3ம் தேதி மாலை, 4:00 மணிக்கு, தன் விவசாய நிலத்தில், மாடுகளுக்கு புல் அறுத்து கொண்டிருந்தார்.
அப்-போது, அங்கு கிடந்த ஏதோ ஒரு மர்ம பொருள் மீது, அரிவாள் பட்டதால் வெடித்து சிதறியது. இதில், விவசாயி பிரகாஷின் இடது கை விரல்-களில் காயம் ஏற்பட்டு, தேன்கனிக்கோட்டை மற்றும் ஓசூர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். தேன்கனிக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் நேற்று முன்தினம் புகார் செய்தார். காட்டுப்பன்றியை வேட்டையாட வைத்த வெடி வெடித்திருக்கலாம் என, போலீசா-ருக்கு சந்தேகம் எழுந்த நிலையில், விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திட்டமிட்ட சதி? டிஎன்பிஎஸ்சி தேர்வு ரத்து குறித்து திமுக அரசு மீது நயினாருக்கு சந்தேகம்
-
பிரதமர் மோடியின் பயணம் மலேசியா- இந்தியா உறவுகளை வலுப்படுத்தும்; மத்திய அரசு
-
அமெரிக்காவுடனான ஒப்பந்தம் இந்திய விவசாயிகளுக்கு பெரிதும் உதவும்; பியுஷ் கோயல்
-
காங்., எம்பி மனைவியின் பாக்., தொடர்பு குறித்து உயர்மட்ட விசாரணை: அசாம் முதல்வர் வலியுறுத்தல்
-
திமுக- காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்; இபிஎஸ்
-
சேலத்தில் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி
Advertisement
Advertisement