இன்சூரன்ஸ்: ஒரு சிகிச்சைக்கு இரு பாலிசிகளில் கிளெய்ம் பெற முடியுமா?
மூத்த குடிமகனான நான், ஐந்து ஆண்டுகளுக்கு முன் 'ஸ்டார் ஹெல்த்' நிறுவனத்தில் மருத்துவக் காப்பீடு எடுத்தேன். தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பிரீமியம் செலுத்தி வருகிறேன். இப்போது, அதையே தொடர்ந்து வைத்துக் கொள்ளலாமா அல்லது வேறு பாலிசிக்கு மாற்றலாமா?
பாலிசியை ஏன் மாற்ற நினைக்கிறீர்கள் என்பதை நீங்கள் குறிப்பிடவில்லை. மூத்த குடிமக்கள் தங்களின் மருத்துவக் காப்பீட்டு தொகையை உயர்த்த விரும்பினால், பாலிசியை வேறு நிறுவனத்திற்கு மாற்றுவதை விட, தற்போதுள்ள பாலிசியிலேயே தொகையை அதிகரித்துக் கொள்வது அல்லது 'டாப் அப்' மற்றும் 'சூப்பர் டாப் அப்' பாலிசிகளை எடுப்பது சிறந்த வழியாகும்.
இதில், டாப் அப் பாலிசிகளின் பிரீமியம் குறைவு; ஆனால், அடிப்படை பாலிசியின் காப்பீட்டு தொகை முழுமையாக தீர்ந்த பின்னரே இவை செயல்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த இரு முறைகளிலும் கூடுதல் காப்பீட்டு தொகையை பெறும்போது, ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கான காத்திருப்பு காலம் மற்றும் சில குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கான கால வரம்பு அந்த தொகைக்கு மட்டும் புதிதாக துவங்கும்.
மூத்த குடிமக்களுக்கு புதிய காப்பீடு வழங்குவதில் நிறுவனங்கள் சில நேரங்களில் தயக்கம் காட்டக்கூடும். இருப்பினும், நீங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து பாலிசியை பராமரித்து வருவதால், உங்களின் தடையற்ற பாலிசி வரலாறு மற்றும் கிளெய்ம் விபரங்களை சுட்டிக்காட்டி, அதே நிறுவனத்தில் மூத்த குடிமக்களுக்கான பிரத்யேக பலன்களை பெற முயற்சி செய்யலாம்.
வெளி நோயாளியாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற காப்பீடு பாலிசிகள் உள்ளனவா?
வெளி நோயாளி சிகிச்சை செலவுகளை ஈடு செய்யும் பாலிசிகள் மிகச் சில உள்ளன. அவற்றில் ஒன்று, சமீபத்தில் 'கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ்' நிறுவனம் அறிமுகம் செய்துள்ள 'கேலக்ஸி ட்வின் 360' என்ற பாலிசி. உங்கள் முகவர் அல்லது பிற காப்பீட்டு இடைத்தரகர்களிடம் இது போன்ற வேறு என்னென்ன பாலிசிகள் உள்ளன; அவற்றின் விதிமுறைகள், வயது வரம்பு, உடல்நல வரலாறு போன்ற நிபந்தனைகள் என்ன என்பதை அறிந்து, உங்களுக்கு ஏற்றதை தேர்வு செய்வது நல்லது.
என்னிடம் இரண்டு மருத்துவ காப்பீடு பாலிசிகள் உள்ளன. நான் கண்புரை அறுவை சிகிச்சை செய்ய விரும்புகிறேன். இரு பாலிசிகளிலிருந்தும் செலவை கிளெய்ம் செய்ய முடியுமா?
மருத்துவமனை பணியாளர் ஒருவர், ஒரு பாலிசியில் தான் கிளெய்ம் செய்ய முடியும் என்று சொன்னார். அது சரியா? ஒருவரிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட மருத்துவ காப்பீடு பாலிசிகள் இருந்தால், அவற்றில் ஏதேனும் ஒன்றிலிருந்தோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பாலிசிகளிலிருந்தோ கிளெய்ம் செய்யலாம்.
ஆனால், எல்லாம் சேர்ந்து, நீங்கள் உண்மையில் செலவழித்த தொகையை விட அதிகமாக பெற முடியாது.கிளெய்ம் செய்ய, செலவுக்கான ரசீதுகள் மற்றும் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். எந்த பாலிசி அல்லது எந்த பாலிசிகளின் சேர்க்கை உங்களுக்கு அதிக பயன் தரும் என்பதை தேர்வு செய்யும் சுதந்திரம் உங்களுக்கே உள்ளது. கண்புரை அறுவை சிகிச்சைக்கு பெரும்பாலான பாலிசிகளில் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுடன் கூடிய காப்பீடு தான் வழங்கப்படுகிறது.
எனவே, எந்த பாலிசி அல்லது பாலிசிகளின் சேர்க்கை உங்களுக்கு அதிக நன்மை தரும் என்பதை முன்கூட்டியே சரிபார்த்து கொள்ளுங்கள்.
எல்.ஐ.சி., அல்லது கிளெய்ம் செட்டில்மென்ட் விகிதம் அதிகமுள்ள தனியார் நிறுவனமான ஆக்சிஸ், மேக்ஸ் லைப் இன்சூரன்ஸ் போன்றவற்றில் டேர்ம் இன்சூரன்ஸ் எடுப்பது பாதுகாப்பானதா?
உங்கள் ஆயுள் காப்பீடு பாலிசியை நம்பகமான, நிதி ரீதியாக வலுவான, வாடிக்கையாளர் சேவை யில் சிறந்து விளங்கும் நிறு வனத்திலிருந்து வாங்குவது மிகவும் முக்கியம். அந்த வகையில், நிறுவனத்தின் பெயர், செயல் திறன் ஆகியவற்றை ஆராய்ந்து முடிவு எடுக்கும் உங்கள் அணுகுமுறை மிகச் சரியானதே.
அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் வாயிலாக கண் டிப்புடன் கண்காணிக்கப்படுகின்றன. அரசு நிறுவனமாக இருந்தாலும், தனியார் நிறுவனமாக இருந்தாலும், அனைவரும் ஒரே விதமான விதிமுறைகளுக்குள் தான் செயல்பட வேண்டும்.
பாலிசி வாங்கிய பிறகு சேவையில் தாமதம் அல்லது பாலிசி குறித்த புகார்கள் இருந்தால், அவற்றை ஐ.ஆர்.டி.ஏ.ஐ., வரை எடுத்து செல்ல தெளிவான நடைமுறைகள் உள்ளன. அதனால், நியாயமான தீர்வு கிடைக்கும் என்று நம்பலாம். எனவே, உங்கள் கேள்விக்கான நேரடி பதில் - அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் ஒரே மாதிரியாக ஒழுங்கு படுத்தப்பட்டவையே.
எந்த நிறுவனத்தை தேர்ந்தெடுப்பது சிறந்தது என்பதை ஆராய, உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனுபவங்களை கேட்டு அறியுங்கள். அதே நேரம், உங்கள் தேவைக்கு ஏற்ற சரியான பாலிசியும், நம்பகமான மற்றும் உடனடி சேவை வழங்கும் முகவரையும் தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்துங்கள்.
இரண்டு பாலிசிகளில் இருந்து பணம் பெற முடியாது எனில் ஒரு பாலிசி மட்டுமே போதுமே? எதற்காக இரண்டாவது பாலிசி போட வேண்டும்? இரண்டாவது பாலிசி போட முடியாத வகையில் அரசாங்கம் தடுத்திருக்க வேண்டாமா? சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனம் நீங்கள் ஏற்கனவே ஒரு பாலிசி போட்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு இரண்டாவது பாலிசி போட்டாலும் பயனில்லை என்று சொல்ல வேண்டாமா.?
ஒன்றுக்கும் மேற்பட்ட பாலிசிகள் போட்டிருந்த ஒருவர் மரணம் அடைந்தால் அவருக்கு ஒரு பாலிசி பணம் மட்டும் தான் கொடுப்பார்களா? அல்லது கூடுதலாக போட்ட பாலிசிகளில் இருந்தும் பணம் கிடைக்குமா.?
ஒருவேளை உங்கள் பாலிசி 5 லட்ச ரூபாய் ஆக இருந்து நீங்கள் செலவைத்த தொகை 10 லட்சமாக இருந்தால் நீங்க 2ம் பயன்படுத்தலாமா லாப நோக்கில் claim செய்யமுடியாது என்பது சரி ஆனால் செலவழித்த தொகையாவது கிடைக்குமா
Health Insurance ஒன்று போதுமானது... Life and Term Insurance எத்தனை வேண்டுமானாலும் போடலாம்... அனைத்திலும் கிளைம் பெறமுடியும்...
yes.but one with higher amount better instead of two.say take one policy for 10 lakkh instead of two policies for 5 laks each.premium for10 lakh will be lesser than two 5 lakhs piliciesமேலும்
-
பா.ஜ., ஆர்ப்பாட்டம்
-
காலை உணவை புறக்கணித்த தஞ்சை துாய்மை பணியாளர்கள்
-
அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா
-
அமைச்சர்கள் தொகுதிகளில் ஜாதி பாகுபாடு அதிகம்: சொல்கிறார் கிருஷ்ணசாமி
-
ஆக்கிரமிப்பால் சுருங்கிய ரோடு, மின்கம்பத்தால் இடையூறு தேனி பென்னிகுவிக் நகரில் பொதுமக்கள் தவிப்பு
-
ஏ.ஐ., தொழில்நுட்ப பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்