உலக விளையாட்டு செய்திகள்
இத்தாலி வீராங்கனை கலக்கல்
மிலன்: இத்தாலியில், குளிர்கால ஒலிம்பிக் 25வது சீசன் நடக்கிறது. பெண்களுக்கான 3000 மீ., 'ஸ்பீடுஸ்கேட்டிங்' போட்டியில், பந்தய துாரத்தை 3 நிமிடம், 54.28 வினாடியில் கடந்த இத்தாலியின் பிரான்செஸ்கா லோலோபிரிஜிடா 35, தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். குளிர்கால ஒலிம்பிக் வரலாற்றில் 'ஸ்பீடுஸ்கேட்டிங்' போட்டியில் தங்கம் வென்ற முதல் இத்தாலி வீராங்கனையானார் லோலோபிரிஜிடா.
ஆர்சனல் அணி ஆதிக்கம்
லண்டன்: இங்கிலாந்தில் நடக்கும் பிரிமியர் லீக் கால்பந்து தொடருக்கான போட்டியில் ஆர்சனல், சுந்தர்லாந்து அணிகள் மோதின. அபாரமாக ஆடிய ஆர்சனல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரை விளையாடிய 25 போட்டியில், 17 வெற்றி, 5 'டிரா', 3 தோல்வி என, 56 புள்ளிகளுடன் ஆர்சனல் அணி முதலிடத்தில் நீடிக்கிறது. அடுத்த இரு இடத்தில் மான்செஸ்டர் சிட்டி (47), ஆஸ்டன் வில்லா (47) அணிகள் உள்ளன.
தென் கொரியா சாம்பியன்
குயிங்டாவோ: சீனாவில், ஆசிய அணிகளுக்கான பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. பெண்களுக்கான பைனலில் சீனா, தென் கொரியா அணிகள் மோதின. இதில் தென் கொரிய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக கோப்பை வென்றது. ஆண்களுக்கான பைனலில் ஜப்பான், சீனா அணிகள் மோதின. இதில் ஜப்பான் அணி 3-0 என வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் கைப்பற்றியது.
எக்ஸ்டிராஸ்
* இந்தியாவுக்கு எதிரான 'டி-20' உலக கோப்பை போட்டியை (பிப்.15, கொழும்பு) புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இதை மறுபரிசீலனை செய்யும்படி இலங்கை கிரிக்கெட் போர்டு வலியுறுத்தியுள்ளது. ஐ.சி.சி., துணை தலைவர் இம்ரான் கவாஜாவும் அவசரமாக லாகூர் சென்றுள்ளார். இந்தியா-பாக்., போட்டியை நடத்துவது தொடர்பாக, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு நிர்வாகிகளுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
* அசாமில் நடந்த சந்தோஷ் டிராபி சீனியர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 79வது சீசனுக்கான பைனலில் சர்வீசஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் கேரளாவை வீழ்த்தி, 8வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
* ஜிம்பாப்வே, நமீபியாவில் நடந்த ஐ.சி.சி., உலக கோப்பை (19 வயது) கிரிக்கெட் தொடருக்கான கனவு அணியில் இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி, கனிஷ்க் சவுகான், ஹெனில் படேல் இடம் பெற்றுள்ளனர். மும்பை வந்த இந்திய அணியினருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்ட்டது.
* சென்னை ஓபன் ஏ.டி.பி., சேலஞ்சர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு தகுதிச் சுற்றின் முதல் போட்டியில் இந்தியாவின் நிதின் குமார் சின்ஹா 6-4, 6-1 என, சகவீரர் தேஜோ ஜெய பிரகாஷை வீழ்த்தினார்.
* ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் நடந்த தேசிய சூப்பர்கிராஸ் சாம்பியன்ஷிப் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில், கேரளாவின் எர்ணாகுளத்தை சேர்ந்த பசில் சன்னி, முதன்முறையாக தேசிய சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
மேலும்
-
அதிக ஒலியுடன் இயக்கப்படும் 'டூவீலர்'களால்... காது கிழியுது... வாகனங்களை கைப்பற்றி அபராதம் விதிக்க வலியுறுத்தல்
-
இன்சூரன்ஸ்: ஒரு சிகிச்சைக்கு இரு பாலிசிகளில் கிளெய்ம் பெற முடியுமா?
-
ஜெ., சசி சொத்துக்குவிப்பு வழக்கு; தீர்ப்புக்கு முன் திக்...திக்... நிமிடங்கள்
-
மாநாடு சென்ற ஐ.ஜே.கே.வினர் வழியனுப்பிய அ.தி.மு.க.வினர்
-
துாய்மைப்பணியாளர் பேரன் சிகிச்சைக்கு மேயர் உதவி
-
ரிப்போர்ட்டர் லீக்ஸ்