ஜப்பானில் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுகிறார் சனே தகாய்ச்சி
டோக்கியோ: ஜப்பானில் இன்று தேர்தல் நடைபெற்ற நிலையில், பிரதமர் சனே தகாய்ச்சியின் எல்டிபி கட்சி தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்று தேர்தலுக்கு பிந்தையக் கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமராக பொறுப்பேற்ற சனே தகாய்ச்சி, தனக்கு இருக்கும் ஆதரவை பயன்படுத்தி ஆளும் கட்சியின் பலத்தை அதிகரிக்க திட்டமிட்டார். இதற்காக, பதவி காலத்திற்கு முன்பே, ஜப்பான் பார்லியை கலைத்து விட்டு, பிப்ரவரி 8ம் தேதி தேர்தலை அறிவித்தார். அதன்படி, ஜப்பானில் உள்ள 465 இடங்களுக்கு இன்று ஓட்டுப்பதிவு நடைபெற்றது.
இந்த நிலையில், பிரதமர் சனே தகாய்ச்சியின் எல்டிபி கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சியான ஜப்பான் இனோவேஷன் கட்சியும் சுமார் 300 இடங்களுக்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்கும் என்று அந்நாட்டின் பிரபல ஊடகமான என்.எச்.கே., நடத்திய தேர்தலுக்கு பிந்தையக் கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.
ஆட்சியமைக்க 233 இடங்களே போதும் என்ற நிலையில், அதிக பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்க இருக்கிறது. இதன்மூலம், பார்லியின் அனைத்து குழுக்களையும் கட்டுப்படுத்தும் முழு அதிகாரத்தையும் சனே தகாய்ச்சியின் எல்டிபி தலைமையிலான கூட்டணி கைப்பற்ற இருக்கிறது.
முக்கிய எதிர்க்கட்சியான 'சென்ட்ரிஸ்ட் ரிபார்ம் அலையன்ஸ்' தனது வசம் இருந்த இடங்களில் மூன்றில் ஒரு பகுதியை இழக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் சனே தகாய்ச்சி, தனது புதிய பதவி காலத்தில் முக்கிய சவால்களை எதிர்கொள்ள இருக்கிறார். ஜப்பானில் பெருகி வரும் முதியோர் மக்கள் தொகை உயர்வு, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்கள், பலவீனமான அந்நாட்டு நாணயமான 'யென்'னின் மதிப்பு, சீனாவுடனான கசப்பான உறவுகள் மற்றும் தைவான் விவகாரத்தில் ஜப்பானின் ராணுவ நிலைப்பாடு உள்ளிட்ட பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன. இது ஒருபுறம் இருக்க அமெரிக்க அதிபர் டிரம்ப், சனே தகாய்ச்சிக்கு முழு ஆதரவு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
@block_Y@
பிரதமர் மோடி வாழ்த்து
வாழ்த்துச் செய்தியில்; ஜப்பான் பார்லி தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற பிரதமர் சனே தகாய்ச்சிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நமது நாடுகளுக்கு இடையேயான ராஜதந்திர உறவும் மற்றும் உலகளாவிய கூட்டாண்மையும், சர்வதேச அளவில் அமைதி மற்றும் செழிப்பை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. உங்களின் சிறப்பான தலைமையின கீழ் இருநாடுகளின் நட்புறவை மேலும் உயரத்திற்கு எடுத்துச் செல்வோம் என்று நம்புகிறேன், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். block_Y
பலே தகாய்ச்சி தங்கச்சி கிட்ட டகாய்ச்சி வேலை பலிக்காது.
வாழ்த்துகள் தங்கச்சி , ...தகாய்ச்சி .
ஜப்பானின் பிரதமராகவுள்ள இந்த Sanae Takaichi தங்கள் நாட்டில் முஸ்லிம் கல்லறைகள் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து தெரிவித்து வந்திருக்கிறார். ஜப்பானில் வசிக்கும் முஸ்லீம்களாகிய நீங்கள் எங்கள் பழக்க வழக்கங்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். நீங்கள் இங்கு இறக்க விரும்பினால், உங்கள் சடலத்தை எரிப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள் இல்லாவிட்டால் உங்கள் உடலை உங்களின் சொந்த நாட்டிற்குத் திருப்பி கொண்டு செல்லுங்கள் ஆனால் எங்கள் மண்ணில் உங்கள் பிணத்தை புதைக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று தைரியமாக தேர்தல் பரப்புரை செய்தார். அந்த துணிச்சலுக்காகத்தான் ஜப்பானியர்கள் இவரை தேர்ந்தெடுத்துள்ளனர்!மேலும்
-
அதிக ஒலியுடன் இயக்கப்படும் 'டூவீலர்'களால்... காது கிழியுது... வாகனங்களை கைப்பற்றி அபராதம் விதிக்க வலியுறுத்தல்
-
இன்சூரன்ஸ்: ஒரு சிகிச்சைக்கு இரு பாலிசிகளில் கிளெய்ம் பெற முடியுமா?
-
ஜெ., சசி சொத்துக்குவிப்பு வழக்கு; தீர்ப்புக்கு முன் திக்...திக்... நிமிடங்கள்
-
மாநாடு சென்ற ஐ.ஜே.கே.வினர் வழியனுப்பிய அ.தி.மு.க.வினர்
-
துாய்மைப்பணியாளர் பேரன் சிகிச்சைக்கு மேயர் உதவி
-
ரிப்போர்ட்டர் லீக்ஸ்