செனாப் நதியில் ரூ.5,129 கோடியில் சவல்கோட் நீர்மின் திட்டம் துவங்கியது
புதுடில்லி: பாகிஸ்தான் உடனான சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டதை தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீரில் உள்ள செனாப் நதியில், 5,129 கோடி ரூபாய் மதிப்பில், சவல்கோட் நீர்மின் திட்டப் பணிகளை மத்திய அரசு துவக்கி உள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், கடந்த ஆண்டு ஏப்., 22ல், பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, அந்நாட்டில் உள்ள பயங்கரவாத முகாம்களை, 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில், நம் படைகள் அழித்தன.
ஒப்பந்தம்
பயங்கரவாதத்துக்கு பாக்., அரசு ஆதரவு அளித்து வருவதால் கடுப்பான மத்திய அரசு, அந்நாட்டுடனான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது. பாகிஸ்தானின், 90 சதவீத விவசாயம் இந்த நதிநீரை சார்ந்தே உள்ளது. சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, செனாப் நதியில் நான்கு முக்கிய நீர்மின் திட்டங்களை விரைந்து முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி, பாகல் துல், கிரு ஆகிய நீர்மின் திட்டங்களை, இந்தாண்டு டிசம்பருக்குள் செயல்படுத்தவும், குவார் நீர்மின் திட்டத்தை, 2028 மார்ச்சுக்குள் முடிக்கவும், முக்கியத்துவம் வாய்ந்த ரட்லே அணையின் கட்டுமானத்தை விரைவுபடுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதன் மூலம், பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த சிந்து நதி நீர், இனி நம் நாட்டின் விவசாயத்திற்கே கிடைக்கும். இத்திட்டங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, கிஷ்துவார் மாவட்டத்தில் உள்ள பாகல் துல் நீர்மின் திட்டம். இது, 1,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறனுடன், செனாப் ஆற்றுப்படுகையில், 548 அடி உயரத்தில் கட்டப்படும் நாட்டின் மிக உயரமான அணையாகும்.
இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரில் உள்ள செனாப் நதியில், 5,129 கோடி ரூபாய் மதிப்பில், சவல்கோட் நீர்மின் திட்டப் பணிகளை மத்திய அரசு துவக்கி உள்ளது. இது, உதம்பூர் மற்றும் ராம்பன் மாவட்டங்களில் அமைகிறது.
ஒன்பது ஆண்டுகள்
முதல் கட்டத்தில், 1,406; இரண்டாம் கட்டத்தில், 450 என மொத்தம், 1,856 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இது, செனாப் நதியில் ஏற்கனவே உள்ள பாக்லிஹார் திட்டத்திற்கும், சலால் திட்டத்திற்கும் இடையே அமைகிறது. இது, ஆற்றின் ஓட்டத்திலேயே அமையும் நீர்மின் திட்டமாகும். இத்திட்டம் நிறைவடைய ஒன்பது ஆண்டுகளாகும் என, கணிக்கப்பட்டுள்ளது. சவல்கோட் நீர்மின் திட்டத்தை விரைந்து முடிக்க, தேசிய நீர்மின் சக்தி கழகம் டெண்டர் விட்டுள்ளது.
விரைவில் கட்டுமானப் பணிகளை முடித்து பாக்கிஸ்தானை பாலைவனமாக மாற்ற வேண்டும் . நீர் கொடுக்க கூடாதுமேலும்
-
அதிக ஒலியுடன் இயக்கப்படும் 'டூவீலர்'களால்... காது கிழியுது... வாகனங்களை கைப்பற்றி அபராதம் விதிக்க வலியுறுத்தல்
-
இன்சூரன்ஸ்: ஒரு சிகிச்சைக்கு இரு பாலிசிகளில் கிளெய்ம் பெற முடியுமா?
-
ஜெ., சசி சொத்துக்குவிப்பு வழக்கு; தீர்ப்புக்கு முன் திக்...திக்... நிமிடங்கள்
-
மாநாடு சென்ற ஐ.ஜே.கே.வினர் வழியனுப்பிய அ.தி.மு.க.வினர்
-
துாய்மைப்பணியாளர் பேரன் சிகிச்சைக்கு மேயர் உதவி
-
ரிப்போர்ட்டர் லீக்ஸ்