பாகிஸ்தான் முழு அடைப்பு போராட்டம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கராச்சி: பாகிஸ்தானில், எதிர்க்கட்சிகள் கூட்டணி விடுத்த நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தால் பலுசிஸ்தானின் பெரும் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.


நம் அண்டை நாடான பாகிஸ்தானில், கடந்த 2024, பிப்ரவரி 8ம் தேதி நடந்த பொதுத்தேர்தலில் முறைகேடுகள் நடந்தாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.


தேர்தல் நடந்ததன் இரண்டாவது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில், முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சி உட்பட நாட்டின் அனைத்து எதிர்க்கட்சிகளின் ஐக்கிய முன்னணியான தெஹ்ரீக் - இ - தஹபுஸ் - இ - ஆயின் பாகிஸ்தான் சார்பில், நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.



நேற்று நிகழ்ந்த முழு அடைப்பால் இம்ரான் கானின் கட்சிக்கு அதிக செல்வாக்குள்ள பலுசிஸ்தானின் பெரும் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முடங்கியது. நாட்டின் பிற பகுதிகளில் லேசான பாதிப்புகள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement