பட்ஜெட் மீதான விவாதத்தில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம்; சொல்கிறார் ராகுல்
புதுடில்லி: பட்ஜெட் மீதான விவாதம் குறித்து அரசு கவலைப்படுகிறது, ஆனால் நாங்கள் விவாதத்தில் ஆர்வமாக உள்ளோம் என காங்கிரஸ் எம்பி ராகுல் தெரிவித்துள்ளார்.
பார்லிமென்ட் வளாகத்தில் நிருபர்களிடம் ராகுல் கூறியதாவது: பிரதமரை எம்.பி.க்கள் மிரட்டுகிறார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை. பிரதமரைத் தாக்கப் போவதாக யாராவது சொன்னால், உடனடியாக ஒரு எப்.ஐ.ஆர் போடுங்கள். அந்த நபரைக் கைது செய்யுங்கள். நீங்கள் ஏன் அப்படிச் செய்யவில்லை.
புத்தகத்தை...
பட்ஜெட் மீதான விவாதம் குறித்து அரசு கவலைப்படுகிறது, ஆனால் நாங்கள் விவாதத்தில் ஆர்வமாக உள்ளோம். சில நாட்களுக்கு முன்பு, நரவனே எழுதிய புத்தகத்தை மேற்கோள் காட்டி விவாதிக்க நான் விரும்பவில்லை, அதனால் அவையை மத்திய அரசு முடக்கியது. நான் பலமுறை பேச அனுமதிக்கப்படவில்லை. முதலில், ஒரு புத்தகத்தை மேற்கோள் காட்ட முடியாது என்று அவர்கள் சொன்னார்கள்.
பத்திரிகையை...
நான் ஒரு பத்திரிகையை மேற்கோள் காட்டுவதாகச் சொன்னபோது, ஒரு பத்திரிகையையும் மேற்கோள் காட்ட முடியாது என்று சொன்னார்கள். பின்னர் இந்த விவகாரம் குறித்து நான் பேசவே விரும்பவில்லை. பாதுகாப்பு அமைச்சரும் புத்தகம் வெளியிடப்படவில்லை என்று பொய்யாகக் கூறினார். உண்மையில், புத்தகம் வெளியிடப்பட்டுவிட்டது, அதன் நகல் எங்களிடம் உள்ளது. உண்மை மிகவும் தெளிவாக உள்ளது.
நிபந்தனைகள்
அமெரிக்க ஒப்பந்தம், அது செய்யப்பட்ட விதம், என்ன நடந்தது, நமது விவசாயிகள் மீதான தாக்கம் ஆகியவை விவாதிக்கப்படவிருப்பதால், பட்ஜெட்டில் விவாதம் நடத்துவது குறித்து அரசு கவலைப்படுவதாக நான் நினைக்கிறேன். முழு எதிர்க்கட்சியும், பார்லிமென்டில் விவாதம் நடத்த ஆர்வமாக இருக்கிறது. ஆனால் அது நடக்க வேண்டுமென்றால், அவர்களின் நிபந்தனைகளை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் அமெரிக்காவுடன் சமீபத்திய வர்த்தக ஒப்பந்தம் காரணமாக, மத்திய பட்ஜெட் குறித்து விவாதம் நடத்த அரசு விரும்பவில்லை. இவ்வாறு ராகுல் கூறினார்.
நீங்கள் ஆணியே புடுங்க வேண்டாம்......
Before every parliament session, Rahul Gandhi visits foreign, comes back and then starts something just to ensure parliament doesnt function. Check the record, if you dont believe me.
நீர் எதிர்க்கட்சித்தலைவராக வேலை செய்தது போதும். கையால் ஒன்றும் ஆகப்போவது இல்லை. நீர் அவைத்தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வாரும். என்னாகிறது என்று பார்ப்போம். உங்கள் குடும்பம் முழுவதும் கை கட்சியை விட்டு விலக வேண்டும். அப்போது தான் அதற்கு எதிர்காலம்.
ஒவ்வொரு கூட்டத்திலும் டீப் ஸ்டேட் தூண்டுதலுடன் ஏதாவது ஒரு பிரச்சினை செய்து பாராளுமன்றத்தை முடக்க முயற்சி செய்வதே இவர் வேலையாகி விட்டது.
முதலில் அவையில் ஒழுங்கா கண்ணியமா நடந்துக்க முயற்சி பண்ணுங்க. ரவுடி ஆளுங்களுயெல்லாம் வெளீயே அனுப்புங்க. அப்பறமா பட்ஜெட் விவாதம் பற்றி யோசிக்கலாம்.
அப்போ நான் என் குடும்பம் இந்தியர்கள் இல்லை. காங்கிரஸ், SP , TMC, VCK அண்ட் AAP பிரதிபலிப்பு என்று சொல் . மொத்தமாக இந்தியர்கள் பிரதிபலிப்பு என்று சொல்ல நீங்கள் யார். பிஜேபி மட்டும் 44. 2% வோட்டு வாங்கியுள்ளது. இத்தனை பேரோட பிரதிபலிப்பு என்னாவது. தாங்குங்க அதுக்குன்னு ரொம்ப தாங்காதிங்க . ராகுல் மொத்தம் எத்தனை தேர்தல் தோற்று என்று பாருங்கள் . தினமும் எதாவது பிரச்சனை உண்டு பண்ணி வெளி நடப்பு செய்வது ஒரு நல்ல எதிர் கட்சி தலைவருக்கு அழகா
அப்படியா.... சொல்லவேயில்லை..... உனக்கு இருக்கும் அறிவுக்கு நீ அமெரிக்கா ஜனாதிபதியாக வேண்டிய ஆள்.... ஆனால் இந்திய மக்கள் உன் கட்சியை தேர்தலில் விரட்டி விரட்டி அடிக்கிறார்கள்... என்ன செய்ய.... கர்மா சும்மா விடாது.
அதை நீ சொல்ற பார்த்தியா ..... அவைக்கு போனால் விவாதம் செய்யாமல்.... ரவுடிகள் போல் செயல்பட வேண்டியது.... வெளியே வந்து விவாதத்துக்கு தயார் என்று கதை அளக்க வேண்டியது..... இது தான் இண்டி கூட்டணி ஆட்களின் வேலையாக இருக்கிறது.
பாஜக ஆட்சி 11 வருடம் ஆகிவிட்டது. இப்போ போரடிக்குது. ஆனால் இவர் காங்கிரசில் உள்ளவரை பாஜகவை வீட்டுக்கு அனுப்ப முடியாது.
உன்னையும் போரடிகிதுன்னு வீட்டை விட்டு துரத்தி விட போறாங்க
பட்ஜெட் தவிர மற்ற அனைத்தையும் பேசி, நாடாளுமன்ற செயல்பாட்டை நடக்கவிடாமல் செய்வது ராகுல் தலைமையிலான எதிர் கட்சிசளின் வேலை. ராகுல் தன் தொகுதி மக்களுக்கு என்ன செய்தார்? ராகுல் நாடாளுமன்றத்தில் பேசும்போது, ஆளும் கட்சி MPகளையோ, சபாநாயரையோ பார்த்து பேச மாட்டார். எதிர் கட்சி MPகளை பார்த்து திரும்பி நின்று பேசுவார்.மேலும்
-
வங்கதேசத்தில் எரித்துக் கொல்லப்பட்ட இளைஞரின் குடும்பத்தினருக்கு நிவாரணம்
-
'ஏர் இந்தியா' விமானத்தில் கோளாறு; டில்லி பயணியர் கடும் அவதி
-
திருநெல்வேலியில் 9வது பொருநை புத்தகத் திருவிழா தொடக்கம்: நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்ட எழுத்தாளர் செ.திவான் புறக்கணிப்பு
-
சொத்து வரிக்கு ரூ.20,000 லஞ்சம்: நாமக்கல் மாநகராட்சி அலுவலர் கைது
-
திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக 70 நாட்களாக காத்திருக்கிறோம்; கிரிஷ் சோடங்கர் வேதனை
-
திமுக அரசால் மதுரை எய்ம்ஸ் தாமதம்: அண்ணாமலை குற்றச்சாட்டு