திருநெல்வேலியில் 9வது பொருநை புத்தகத் திருவிழா தொடக்கம்: நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்ட எழுத்தாளர் செ.திவான் புறக்கணிப்பு
திருநெல்வேலி:திருநெல்வேலியில் அரசு சார்பில் நடத்தப்படும் 9வது பொருநை புத்தகத் திருவிழா, திருநெல்வேலி டவுன் மாநகராட்சிக்கு எதிரே உள்ள வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. இத்திருவிழா பிப்ரவரி 22ம் தேதி வரை நடைபெறுகிறது.
தொடக்க விழாவில் சபாநாயகர் அப்பாவு, எம்.எல்.ஏ., அப்துல் வஹாப், கலெக்டர் சுகுமார், மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன், கமிஷனர் மோனிகா ரானா உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழகத்தின் முன்னணி 119 பதிப்பகங்கள் ஸ்டால்கள் அமைத்துள்ளன. அரசு பாடநூல் கழகம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன. மேலும் சுயஉதவி குழுக்கள் தயாரிப்புகள், மாணவ - மாணவியரின் படைப்புகளும் க இன்னொரு அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
புறக்கணிப்பு சர்ச்சை:
ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வ.உ.சிதம்பரனார், பாரதியார், தேவநேயப்பாவாணர், புதுமைப்பித்தன், சு.சமுத்திரம், தொ.பரமசிவன், நெல்லை கண்ணன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் நூல்கள் அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது.
இதில் வரலாற்று ஆய்வாளரும் எழுத்தாளருமான செ.திவான் எழுதிய 135 நூல்கள், 2022ம் ஆண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நாட்டுடைமையாக்கப்பட்டு, உரிமைத்தொகையாக அவருக்கு ரூ.15 லட்சம் வழங்கப்பட்டது.
ஆனால் புத்தகத் திருவிழாவில் நடைபெறும் தினசரி இலக்கிய நிகழ்வுகளுக்கான அழைப்பிதழில் இடம்பெற்ற 243 பேரின் பட்டியலில் செ.திவான் பெயர் இடம்பெறவில்லை. நேற்று நடந்த நிகழ்வில், 190க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதிய செ.திவானுக்கு புத்தகத் திருவிழாவிற்கான அழைப்புதல் தரப்படவில்லை.
அழைப்பதிலும் நிகழ்விலும். மூத்த எழுத்தாளர் அழைக்கப்படவில்லை. நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்ட 30 எழுத்தாளர்களில் தற்போதும் தொடர்ந்து ஆய்வு நூல்கள் எழுதி வருகிறார் செ.திவான்.
தற்போது அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தோற்றமும் வளர்ச்சியும் என்ற நூலை எழுதி வருகிறார். அவர் இலக்கிய வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மண்ணின் வரலாற்றை நன்கு அறிந்த முக்கிய எழுத்தாளரான அவரை, இனி வரும் நிகழ்வுகளிலாவது கவுரவிக்க வேண்டும் என்பது இலக்கிய ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும்
-
சமூக வலைதளங்களில் ஏ.ஐ., பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு: தவறாக பயன்படுத்தினால் இனி சட்ட நடவடிக்கை பாயும் வரும்
-
இறையாண்மையை சிதைக்கும் வகையில் பேச்சு; அமைச்சர் ராஜகண்ணப்பன் மன்னிப்பு கேட்க பா.ஜ., வலியுறுத்தல்
-
இலங்கை வீரர் ஹசரங்கா விலகல்
-
டில்லியில் ஏ.ஐ., உச்சி மாநாடு; ஹோட்டல் அறைகளுக்கான கட்டணம் கிடுகிடு உயர்வு
-
நமீபியாவை வென்றது நெதர்லாந்து
-
10ம் வகுப்பில் முதல் பொதுத்தேர்வு கட்டாயம்: சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தல்